கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா!

a sign for mariguana on a canadian background

காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்!

தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தினால் மரணதண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை பல நாட்கள் வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கனடாவில் கேளிக்கைக்காக கஞ்சா விற்பனையை சட்டர்பூரவமாக்கி உள்ளது அந்நாடு.உலகம் முழுக்க 231 நாடுகள் உள்ளன. இதில் உருகுவே மட்டும்தான் கஞ்சா விற்பனையை சட்டபூர்மாக்கியிருந்தது. இப்போது இரண்டாவது நாடாக கனடா கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கி இருக்கிறது.

கனடாவில் உள்ள நியூபவுண்ட்லாந்து தீவில் விற்பனை செய்யப்படும் கஞ்சாவை அந்நாட்டு மக்கள் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். 2001-ஆம் ஆண்டு முதல் கஞ்சாவை மருத்து தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த கனடா இப்போது கேளிக்கை பொருளாக கஞ்சாவை விற்பனை செய்கிறது.

கஞ்சா பயிர்

கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதால் புதிய சட்ட விதிமுறைகளையும் கனடா அரசு வகுத்துள்ளது. கஞ்சா புகைத்து விட்டு வாகனம் ஓட்டுதல், வன்முறையில் ஈடுபடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை சட்டமாக இயற்றியுள்ளது கனடா அரசு.

போதைக்காக கஞ்சா பயன்படுத்துவதை குற்றமாகக் கருதும் எண்ணத்தை முடிவுக்கு கொண்டு வர கடந்த பல மாதங்களாக கனடா அரசும், மாநில அரசுகளும் தங்களை தயார் செய்து வந்தன.நடப்பில் உள்ள போதைப் பொருட்களை விட கஞ்சா அதிக அளவு ஆபத்தை உருவாக்கும் போதை பொருளாக கருத இடமில்லை என்ற முடிவுக்கு வந்த கனடா அரசு அதனுடைய உற்பத்தி குறித்த முழு விபரங்களையும் வெளியிடவில்லை. கஞ்சாவை சந்தைப்படுத்துகிற நடைமுறை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் மக்களிடம் குழப்பம் காணப்படுகிறது. கஞ்சா ப்ரியர்களுக்கு பற்றாக்குறையும் காணப்படுகிறது. கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கும் கோஷத்தை ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ 2015-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக வைத்தார். இப்போது அதை நிறைவேற்றியிருக்கிறார்.

1923-ஆம் ஆண்டில் இருந்து கஞ்சா பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என கனடாவில் இருந்தது. ஆனால், உலகில் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவர்களில் கனடா வாசிகளும் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் இந்த சட்டம் பொருளற்ற ஒன்றாகி விட்டதாக அரசு குறிப்பிடுகிறது.
ஆனால், 30 கிராமுக்கு மேல் கஞ்சா வைத்திருந்தாலோ, நான்கு செடிகளுக்கு மேல் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தாலோ,சிறுவர்களுக்கு கஞ்சா விற்றாலொ அவைகள் கடும் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது கனடா.

#cannabis_sale #cannabis_Canada #கஞ்சா_விற்பனை #கஞ்சாவை_சட்டபூர்வமாக்கிய_கனடா

 

#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்!

நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*