கண்டு கொள்ளாத அரசு உண்ணாவிரதமிருந்து இறந்த ஜி.டி.அகர்வால்!

எப்படி இருக்கீங்க ஆச்சி?

பயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு!

#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

கங்கை மாசு படுவதை தடுக்க கோரி ரிசிகேசில் கடந்த 111 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நட்த்தி வந்தார் ஜி.டி. அகர்வால் என்ற முன்னால் கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர். இவரின் உண்ணாவிரதப்போராட்ட்த்தை அரசு கண்டு கொள்ளவில்லை. இறுதியாக நேற்று தனது 111 நாள் உண்ணாநிலையில் மரணத்தை தழுவினார்.
உண்மையாக இயற்கையை நேசிப்பவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு சாவைத்தான் அரசு பரிசளிக்கின்றது.. ஏற்கனவே 2011 ஆண்டு சுவாமி நிகமானந்தா என்பவர் ஹரிதுவாரில் இதே போல உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி உயிரிழந்தார். இயற்கை ஆர்வலர் ஜி.டி. அகர்வால் அவர்களுக்கு அஞ்சலி!
பறி கொடுத்துவிட்டோம் சுற்றுச் சூழல் போராளி ஜி டி அகர்வால் எனப்படும் சுவாமி கியான் ஸ்வரூப் சதானனந்த் அவர்களை!

இயற்கை அன்னையான கங்கை நதி மிக மோசமாக மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தியும்,குறிப்பாக கங்கை படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி போராடிய, சதானந்த்தின் 111 நாட்கள் உண்ணாவிரதம் அவரது மரணத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று முன் தினம் வரை தண்ணீரும்,சிறிதளவு தேனும் மட்டுமே உட்கொண்டுவந்த சுவாமி சதானந்த்,’’பல முறை பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கும் நினைவூட்டல் கடிதம் எழுதியும் சிறிதளவு கூட ரெஸ்பான்ஸ் இல்லை.ஆகவே இனி எதையும் உட்கொள்ளமாட்டேன்.என் மரணத்திற்கு பின் இளைய தலைமுறை இந்த போராட்டத்தை நிச்சயம் கையில் எடுப்பார்கள்’’ என அறிவித்தார்!

அப்போதும் அதிகார மையம் அசைந்து கொடுக்காத நிலையில் தான் அவர் உயிர் துறக்க நேரிட்டுள்ளது.

2009 ல் இவர் இதே போல் உண்ணவிரதம் இருந்த போது, 38 வது நாளில், மன்மோகன் சிங்,பகிராதி நதியில் கட்டவுள்ள அணைதிட்டத்தை வாபஸ் பெற்றார் என்பது கவனத்திற்குரியது.

ஆனால்,தொழிற்சாலைகழிவுகள்கொட்டப்படுவது, கங்கையை ஒரு மாபெரும் குப்பைக்கிடங்காக கருதுவது.. போன்ற நிலைமைகள் தொடர்ந்த நிலையில், மற்றொரு துறவியான சுவாமி நிகமானந்தா 100 நாட்களுக்கும் மேல் உண்ணாநோன்பிருந்து இறந்தது 2011 ல்!

பா ஜ க அரசு தனது தேர்தல் வாக்குறுதியிலேயே கங்கை நதி தூய்மைக்கு உத்திரவாதம் சொன்னது!.
வாரணாசி தொகுதி வேட்பாளரான மோடி, கங்கை தூய்மைக்கு 20,000 கோடி திட்டமெல்லாம் அறிவித்தார். ஆனால்,இது வரை அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை , நாளுக்கு நாள் ஹைட்ரோ கார்பன் திட்டம், சுரங்கம் தோண்டும் திட்டம்..என சர்வதேச கார்பரேட் நிறுவனத் திட்டங்களை கங்கை படுகையில் அமல்படுத்துவதிலேயே மோடி அரசு மும்முரம் காட்டி வந்ததது.
அது புனித கங்கையை பாவ கங்கையாக மாற்றியே தீருவது என கங்கனம் கட்டிவிட்ட பிறகு உண்ணாவிரதமாவது,போராட்டமாவது…?
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் அமெரிக்க கோகோ கோலா நிறுவனம் கங்கை தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளையடிக்கவும்,பின் கழிவு நீரை கங்கையில் கொட்டவும் அனுமதி வழங்கப்பட்டது என்பதை நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்.
இந்து தர்மத்தை காக்க புறப்பட்ட காவலர்கள் வேஷமெல்லாம் தேர்தல் நேர ஒட்டு வேட்டைக்கு! இவர்கள் உண்மையில் பன்னாட்டு பாகாசுர நிறுவனங்களின் கைக்கூலிகள் என்பது தான் உண்மை முகமாகும்!
சுவாமி கியான்ஸ்வரூப் சதானந்த் அவர்களே, உங்கள் உயிர்த் தியாகம் வீண்போகாது.கண்ணீர் மல்க வீரவணக்கம் செலுத்துகிறோம்.,உங்கள் போராட்டத்தை நம் இளைய தலைமுறை முன்னெடுக்கும்!
பத்திரிகையாளர் -சாவித்ரி கண்ணனின் முகநூல் பதிவு

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*