கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

தேவர் ஜெயந்தி -ஓபிஎஸ்-இபிஎஸ் பிளெக்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தகர்ப்பு! VIDEO

மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன்பு உதயனானுதாரம் எனும் திரைப்படம் வெளிவந்தது அந்த படத்தை பார்த்து விட்டு கண் கலங்கி அழுதிருக்கிறேன். திரைத்துறையில் இயக்குநராக துடிக்கும் ஒரு கலைஞன் தனது பிறப்பிடம், உறவுகளை துறந்து தனது இளமைக் காலம் முழுவதையும் கோடம்பாக்கத்திலே இழந்து ….. எப்படியாவது ஒரு இயக்குநராக வேண்டுமென துடிதுடிப்பான்.

கதையையும், திரைக்கதையும் எழுதி எழுதி திருப்தி வராமல் கசக்கி போடும் காகித குப்பைகள் மலை போல் குவிந்து கிடைக்கும் .. கடைசியில் முட்டி மோதி தனது கற்பனை வளத்தால் சிறந்த கிளைமாக்ஸ் காட்சியோடு ஒரு கதை, திரைக்கதையை எழுதி முடிப்பான். தனது திரைக்கதை முழுமை பெறும் தருணத்தில் அவனின் சந்தோசம், ஆனந்த கண்ணீர், வானுக்கும் பூமிக்கும் குதிப்பது என அந்த காட்சியில் அவனாக நடித்திருக்கும் மோகன்லாலின் நடிப்பிற்கு இணையாக யாரையும் அருகில் நிறுத்த முடியாது.. அப்படியிருக்கும் அந்த காட்சி …ஒரு திரைக்கதையை எழுதி முடித்து, அது திரைப்படமாக காட்சிப்படுத்த போகும் தருணங்கள் என ஒரு இயக்குநரின் சந்தோச தருணங்களை அப்படியே வாழ்ந்து நடித்திருப்பார் மோகன்லால் .

இறுதியில் திரைக்கதையை எழுதி முடித்து திரைப்படமாக்க நல்ல தயாரிப்பாளரை தேடி அலையும் நேரத்தில் அவனது அறையில் தங்கி இருக்கும் அவனது நண்பனே அந்த திரைக்கதையை திருடி வேறு ஒரு தயாரிப்பாளரிடம் கொடுத்து அதில் அவனே கதாநாயகனாக நடித்து கொண்டிருப்பான்.

தயாரிப்பாளர்களை தேடி அலைந்து கடைசியில் ஒரு தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்த சந்தோசத்தில் அந்த நிஜக் கலைஞன் சென்னை வரும் வேளையில் அவனது நெடுநாள் கனவால், வியர்வையால் உருவான திரைக்கதை களவாடப்பட்டு வேறு திரைப்படமாக காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் …

உண்மையை நிலை அறிந்து துடி துடித்து போவான் அந்த கலைஞன். தனது உழைப்பு, கனவு, கற்பனைத் திறன் திருடப்பட்டு விட்டதே என வெடித்து அழுவான்.. இப்போது வருண் இராேஜந்திரனிடம் முருகதாசும், சன் குழுமமும், ஜெயமோகனும் சமாதானம் பேசுவது போல அந்த கலைஞனிடம் சமாதானம் பேசுவார்கள். ” உனது பெயரை டைட்டிலில் போடுறோம்.. ஒரு பெரும் தொகையை தருகிறோம், என பல வழிகளில் அவனை சமாதானப்படுத்துவார்கள்…

அதற்கு அந்த கலைஞன் சொல்வான்…. எனது எழுத்தை, சிந்தனையை, கற்பனைத் திறனை, ஆதங்கங்களை நான் தான் காட்சி படுத்த ேவண்டும் .. எனது உயிருடன் கலந்துருக்கும் கற்பனை காட்சிகளை நான் தான் படமாக்க வேண்டும். இன்னொருவன் காட்சி படுத்துவது சரியா? எனது படைப்பு விற்பனைக்கானது அல்ல… எனது உணர்வுகளுக்கு நீங்கள் விலை பேச முடியாது…. என பொங்கி தீர்த்து விட்டு வாழ்த்திக் கொண்டு வருவான் அந்த யாதார்த்த கலைஞன்.

இப்படி அன்று மலையாளத்தில் திரைப்படமாக சொன்ன கதை இன்று சர்க்கார் படத்தில் நிஜமாயிருக்கிறது. இது இன்று நேற்று அல்ல.. பல வருடங்களாக இப்படி அடுத்தவர்களின் படைப்புகள், கற்பனைத் திறன்கள் திருடப்பட்டு வருகிறது. திருடியவன் பெரியவன் என்றால் எழுதியவன் குரல் அம்பலம் ஏறாது.. ஆனால் வருண் ராஜேந்திரன் குரல் இன்று கேட்டுருக்கிறது என்றால் அதற்கு காரணம் பாக்கியராஜ் எனும் தனிமனிதன் தான் .

ஒரு காலத்தில் திரைக்கதையில் கொடி கட்டி பறந்த பாக்கியராஜ் அவர்களுக்கு தெரியும். ஒரு கதை, திரைக்கதை எப்படி உருவாகிறது? அதற்காக செலவிடும் நேரம், சிந்திக்கும் ஆற்றல், சூழல்கள், விடாமுயற்சி, பசி, பட்டினி, ஆதங்கங்கள் என … அத்தனையும் உணர்ந்த பாக்கியராஜ் இந்த விசயத்தில் பல நிர்ப்பந்தங்கள், சிபாரிசுகள் , என அனைத்தையும் நிராகாரித்து விட்டு ஒரு உண்மை கலைஞனின் திறமையை அடையாளப்படுத்தியிருக்கிறார்.

இன்று வருண் ராஜேந்திரன் பல சூழ்நிலை நிர்பந்தங்களால் சமாதானப் படுத்தப்பட்டாலும் அடுத்தவனின் வியர்வை, ரத்தங்களை உறிஞ்சு வாழும் முருகதாஸ் போன்ற மனிதர்களின் உண்மை முகம் இன்று வெளியுலகிற்கு தெரிய வந்ததில் சந்தோசமே.. இப்படி கலை, இலக்கியம் போன்ற துறைகளில் புகழின் உச்சியிலிருக்கும் பல கலைஞர்களுக்கு பின்னால் இப்படி தான் வருண் ராஜேந்திரன் போன்றவர்களின் வியர்வையும், ரத்தமும் தான் ஒட்டியிருக்கும் என்பது உண்மை.

#Udayananu_Tharam #உதயநாணுதாரம் #SARKAR #A_R_Murugadas #vijay #ilaiyathalapathy_vijay #vijay_sarkar #SarkarDiwali #SarkarStoryTheft

தன் மகனின் கட் அவுட்டுக்கு பாலூற்றும் ஏழை ரசிகனை என்ன செய்வார் சிவக்குமார்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*