கன மழைக்கு வாய்ப்பில்லை – ’தமிழ்நாடு வெதர் மேன்’

Hyderabad: A view of a flooded street in front at Malakpet in Hyderabad on Thursday following rains. PTI Photo (PTI10_12_2017_000121B)

என்ன ஆனது கேரளப் பெண்களுக்கு?

பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!

‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்? -சுபகுணராஜன்

கனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யப்போவதா அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெதர் மேன் வெளியிட்டுள்ள வானிலை பதிவு வேறு செய்திகளைச் சொல்கிறது.
கடந்த 2017-ஓக்கி புயல் பாதிப்பின் போது அரசு எச்சரிக்கை விடுக்கும் முன்னரே தமிழ் நாடு வெதர் மேன் புயல் குறித்த எச்சரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தின் மிதமான மழை பெயது வரும் நிலையில், தன் முகநூலில் இந்த கனமழை எச்சரிக்கை தொடர்பாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர் மேன் அதில்:-
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7-ந் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 204.5 மி.மீட்டர் மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால் அது கிழக்கு பகுதியில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதனால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கேத்தி மலைப்பகுதியில் ஒரே நாளில் 820 மி.மீட்டர் மழை பெய்தது. தற்போது உருவாக உள்ள புயல் சின்னம் 2009-ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக இருக்கிறது. அது ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்பதால் கேரளா, தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும் தமிழகத்தில் மலைப்பிரதேச பகுதிகளில் தீவிர கண்காணிப்பு அவசியம்.
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தமிழகம் முழுவதும் தேவை இல்லை. குறிப்பாக சென்னைக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. எனவே 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழை போல் மீண்டும் பெய்யும் என மக்கள் அச்சப்பட வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduWeatherman #Rain

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*