கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்!

நாளை நடை திறப்பு கலவரச்சூழல்!

எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்

கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்!

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’

#Metoo பொய் குற்றச்சாட்டு :சின்மயி மீது கல்யாண் மாஸ்டர் வழக்கு?

கோவை கல்லூரி ஒன்றில் பகத்சிங் பிறந்த நாளைக் கொண்டாடிய மாணவி ஒருவரை கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது. ஆனால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒவ்வொரு நாளும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் என்ற பெயரில் அரசியல் பேசி வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கிய கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பின்னர் 100 நாட்கள் அரசியலுக்கு ஓய்வு கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் கல்லூரிகளில் கலந்துரையாடல் என்ற பெயரில் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று வருகிறார். அங்கு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் என்ற பெயரில் தனது அரசியல் கொள்கைகளைப் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
ஆனால், கல்லூரி நிர்வாகங்கள் கமலை அழைப்பது அவரது ஸ்டார் அந்தஸ்துக்காகவே அதற்கான பல லட்ச ரூபாய் ஊதியம் பெற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் கமல் ஒவ்வொரு நிகழ்வையும் அரசியல் மேடையாக மாற்றுகிறார். ஆனால், இதே கல்லூரிகள் பிற கட்சி தலைவர்களையோ, பிற அரசியல் பிரமுகர்களையோ நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை. காரணம் கல்லூரிகளுக்குள் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை என்னும் பெயரில்தான் அரசியல் தலைவர்களை அழைப்பதில்லை.
மாணவர்கள் அரசியல் மயப்படுவதையும் கல்லூரிகள் அனுமதிக்காத நிலையில் கமல் மட்டுமே கல்லூரி மாணவர்களை தன் அரசியல் கட்சியின் பக்கம் இழுக்க இவ்வாறு கல்லூரி மேடைகளை பிரச்சார மேடைகளாக மாற்றி வருகிறார்.

#makkaL_neethi_mayyam #மக்கள்நீதிமய்யம் #கமல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*