காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்!

தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி!

பாஜகவின் மூத்த தலைவர் ஐஸ்வந்த்சிங்கின் மகனும் ராஜ்புத் சாதியினரில் செல்வாக்குள்ள தலைவருமான  மன்வேந்திரா ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பார்மர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் பார்மர் ஷியோ தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மன்வேந்திராசிங்.கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மென்வேந்திரா கட்சி மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பின்னர், “கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தானில் பாஜகவால் ஒரு வளர்ச்சியும் இல்லை. மீண்டும் தாமரை சின்னத்தில் போட்டியிட மாட்டேன்” என்று அறிவித்தார். ராஜ்புத் சாதியினரும் செல்வாக்கு மிக்க தலைவராக மென்வேந்திரா கருதப்படுகிறார். ராஜஸ்தானில் மத வெறுப்பு அரசியலை வைத்து வெல்ல முடியாது காரணம் ராஜஸ்தானில் சிறுபான்மையினர் குறைவு பெரும்பான்மை இந்து சமூகத்திடம் சிறுபான்மையினத்தவர்களைக் காட்டி வெல்ல முடியாது என்னும் நிலையில், ராஜ்புத் சாதியினர்தான் ராஜஸ்தான் ஆட்சியை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு என விவசாயிகளை மோடி அரசின் கொள்கைகள் பெருமளவு பாதித்திருக்கும் நிலையில், நேற்று டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் மன்வேந்திரா.

வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜகவுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

 

 

#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்!

நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*