கேரளம் யாரிடமும் தோற்காது -பினராயி விஜயன்!

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜெயக்குமார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு நிதி திரட்ட அமைச்சர்களுக்கு அனுமதி அளிப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், கூறிய வார்த்தையை பிரதமர் காப்பாற்றவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

புதிய கேரளம் படைக்க உதவி கேட்டு துபாய் அல் நாசர் லீஷர் லாண்டில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற பினராயி விஜயன் பேசியதாவது: பிரதமரை நேரில் சந்தித்து கேரள அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கோரப்பட்டது. உலகம் எங்கும் உள்ள மலையாளிகளை நேரில் சந்தித்து உதவி கோரவே பிரதமருடன் இந்த அனுமதி குறித்து பேசியது. இப்பிரச்சனையில் சாதகமான பதிலளித்த பிரதமர் அறக்கட்டளைகளையும், அமைப்புகளையும் சந்திக்கலாம் என்று யோசனை கூறினார். ஆனால் பிறகு அமைச்சர்களின் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது எதனால் என புரிந்துகொள்ள முடியவில்லை.

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட துயரத்தைப் போக்க கேரளத்திற்கு உதவ பலநாடுகளும் தாமாகவே முன்வந்தன. அந்த உதவிகளை பெற மத்திய அரசு அனுமதிக்கவில்லை. பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் குஜராத் துயரத்திற்கு வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டன. ஆனால், நமக்கு தேவையானபோது நம்மால் புரிந்துகொள்ள முடியாத நிலைப்பாட்டை பிரதமர் மேற்கொண்டார்.

கேரளம் யாரிடமும் தோற்கத் தயாராக இல்லை. நாம் நமது நாட்டை புனரமைத்தே ஆக வேண்டும். புதிய கேரளம் படைப்பதை தடுக்கலாம் என யாரும் கருத வேண்டாம். வெளிநாடுவாழ் மலையாளிகள் நமது நாட்டின் சக்தி. அவர்களிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளில் வாழும் அனைவரும் நாட்டின் புனரமைப்பில் பங்காளிகளாக வேண்டும் என முதல்வர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*