கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி!

#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்!

நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்!

பெண் வழிபாட்டிற்கு எதிராக பெரும் கலவரத்தை கேரளத்தில் நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்/ இந்து தேசியத்தை கட்டமைப்பதாக கூறிக் கொள்ளும் ஆர்.எஸ். ஒரே நாடு அது இந்தியா, ஒரே மதம் அது இந்து மதம் என்னும் அடிப்படையில் ஒரு தேசியத்தைக் கட்டமைக்கிறது. ஆனால், இந்துக்கள் அனைவரும் ஒன்றா என்றால் அதிலும் பாரபட்சம் அய்யப்பனை பெண்கள் வழிபட்டால் இந்த மண்ணை கலவர பூமியாக்கி விடுவோம் என்பதுதான் அவர்கள் கேரளாவுக்கு வழங்கியிருக்கும் செய்தி.

20 -பேருந்துகள் உடைப்பு, 10-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் காயம், பல பெண் பத்திரிகையாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என சபரிமலையை ஒட்டியுள்ள பகுதியையே கலவரபூமியாக்கி விட்டார்கள்.

சபரிமலை விவகாரத்தில் பெண்கள் சபரிமலை அய்யப்பனை வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது.வழக்கமாக தங்கள் அடிப்படை கொள்கைகளுக்கு மாறான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கினால் மேல் முறையீடு அல்லது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் பாஜக அரசு சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அமைதி காத்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு சபரிமலையில் பெண்கள் வழிபடுவதை எதிர்க்கிறதா ஆதரிக்கிறதா என்றால் நிச்சயமாக எதிர்க்கிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது குறித்து மவுனம் சாதித்தது.மத்தியில் அமைதியாக இருந்த பாஜக மாநிலத்தில் தன் தொண்டர்களையும் தலைவர்களையும் தூண்டி விட்டு கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது.
கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோஷத்தோடு கடந்த இரு வாரங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்களைத் திரட்டி சில ஆயிரம் பேரோடு ஊரவலங்களை நடத்தியது. உண்மையில் இதை கேரள மக்கள் விரும்பவில்லை. குறிப்பாக கேரள பெண்கள் விரும்பவில்லை. அவர்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்தனர் ஆர்.எஸ்.எஸ் களத்தில் இறங்கியதைக் கண்ட காங்கிரஸ் தானும் சபரிமலையில் பெண்கள் வழிபடக்கூடாது என களமாடியது.

நேற்று 17-ஆம் தேதி நடை திறப்புக்கு முன்னர் சபரிமலை பக்தர்கள் வரும் வழியெங்கும் பூத்களை அமைத்து விடியோ கேமிராக்கள் இருக்கும் இடங்களில் பெண் பக்தர்களின் காலில் விழுந்து கோவிலுக்கு போகாதீர்கள் என கெஞ்சினார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்கள் மானப்பங்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அச்சுறுத்தி தாக்கி அடித்துரத்தியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பக்தர்கள் வந்த 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் தாக்கப்பட்டது. இந்துப்பெண்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் தாக்குதலதுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

நிலமை கட்டுக்கடங்காமல் போனதால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் மட்டுமே எதிரிகளாக சித்தரித்து வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உண்மையான முகம் காந்தி கொலைக்கு பின்னர் அம்பலமாகிக் கொண்டிருக்கும் நேரம் இது. சபரிமலையில் பெண்கள் வழிபடலாம் என்றால் அய்யய்யோ ஆகம விதிக்கு முரணாணது என்ற கோஷம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து உருவாகிறது.அப்படி என்றால் ஆகம விதிகளின் படி இந்துக்கள் அனைவரும் ஒன்று இல்லை என்கிற முரணை மக்களிடம் கொண்டு செல்லும் சக்தி எந்த அமைப்புக்கு இருக்கிறது.

மதச்சார்பின்மைக்கு சான்றாக நின்ற பாபர் மசூதியை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தோடு இடித்து தகர்த்தவர்கள். இப்போது சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷங்களை எழுப்பியபடி இந்து பெண்களை தாக்குகிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு அமைப்பை வெகு மக்களிடம் அம்பலமாக்க இதை விட ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது.

கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். பாஜக திட்டமிட்டு உருவாக்கும் அய்யப்பனை முன் வைத்து நடக்கும் இந்த கலவரம் இந்து பக்தர்களில் கணிசமானோரை இடதுசாரிகளின் பக்கம் திருப்புமே தவிற இது எந்த வகையிலும் பாஜகவுக்கு கை கொடுக்காது. காரணம் பெரும்பான்மை VS சிறுபான்மை கலவரங்களால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜக பலம் பெற முடியும். இந்துக்களுக்குள் உருவாக்கும் கலவரம் பாஜகவுக்கு தலையிடியாக முடியுமே தவிற அது வாக்குவாங்கியாக மாற்றம் பெறாது.ஆனால், இந்த சூழலை இந்து முஸ்லீம், இந்து கிறிஸ்தவர் கலவரமாக மாற்றினால் பாஜக எளிதாக கேரளத்தில் காலூன்றும்.

ஆனால், இந்துத்துவ குழுக்கள் உருவாக்கியுள்ள இந்த முரண்பாட்டை இடதுசாரிகள் அறுவடை செய்ய முடியும். ஆனால், கடுமையான உழைப்பும் பெருந்திரள் மக்கள் இயக்கங்களையும் கட்டமைத்தால் மட்டுமே அது சாத்தியம்.

#SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence

கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்!

நாளை நடை திறப்பு கலவரச்சூழல்!

எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*