கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்!

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’

#Metoo பொய் குற்றச்சாட்டு :சின்மயி மீது கல்யாண் மாஸ்டர் வழக்கு?

கோவா மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் அமித்ஷா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மனோகர் பாரிக்கர் உள்ளார். சமீபகாலமாக உடல் நலம் குன்றிய அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார். தொடர் சிகிச்சையிலும் இருந்து வருகிறார்.
மனோகர் உடல் நிலை மோசமாக உள்ளதால். அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போதுமான உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வெண்டும் என்று கவர்னரிடம் காங்கிரஸ் மனு அளித்தது.ஆளுநரிடம் கொடுத்த மனுவை அடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியை அழைக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தவும் செய்தது.
இதனால் கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்தர் ஆகிய இருவரும் நேற்று இரவு அவசரமாக டெல்லி கிளம்பிச் சென்றார்கள். அவர்கள் இருவரும் அமித்ஷாவைச் சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
அவர்கள் பாஜகவில் இணைய மாட்டார்கள். இப்போதைக்கு பாஜகவை ஆதரிப்பார்கள். பதவிக்காலம் முடிந்த பின்னர் இவர்கள் இருவரும் பாஜகவில் இணைவார்கள் என்று தெரிகிறது.தயானந்த் மந்த்ரேம் முன்னாள் பாஜக தலைவர் லட்சுமி காந்த் பர்சேகரை வீழ்த்தி வென்றவர் என்பது முக்கியம்.
ஏற்கனவே சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் செயல் தலைவரே பாஜகவில் இணைந்த நிலையில் கோவாவில் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைவதால் பாஜக பெரும்பான்மை பலம் பெறும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியால் தங்கள் சொந்த கட்சி தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட பாஜகவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

“நிச்சயம் அய்யப்பனை தரிசிப்பேன் ” :விரதமிருக்கும் கேரளப் பெண்!

மனுசங்கடா’ படம் பற்றி மனுஷ்யபுத்திரன்!

சேலம் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு!

சிறையில் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*