சபரிமலையில் பெண்கள் : எதிர்த்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சபரிமலை தொடர்பான செய்திகள்

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

சபரிமலையில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் பெண்களும் சபரிமலை கோவிலில் வாழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் கேரளாவில் பிரச்சனை செய்து வந்தது.அய்யப்பன் கோவில் தாத்ரிகளும், பந்தள மகாராஜா குடும்பமும், சில உயர் சாதி சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேசிய ஐய்யப்ப பக்தர் சபை என்ற அமைப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கோவில் புனிதம் கெட்டு விடும். எனவே அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனால் வருகிற 18-ஆம் தேதி முதல் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தும் சூழல் உருவாகி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*