சபரிமலை – தோல்வியடைந்த பெண் வழிபாட்டு உரிமை!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

பெண் வழிபாட்டு உரிமையின் முதல் குரல் தெற்கிலிருந்துதான் உருவானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தே உருவான பெண் விடுதலைக் குரல் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருந்த நிலையில், இப்போது சபரிமலையில் பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்பதை தீர்க்கமாக கூறியுள்ளார்கள் இந்து மத வெறியர்கள்.
10 வயது முதல் 50 வயது வரையுள்ள மாதவிடாய் காலத்தைக் கொண்ட பெண்கள் சபரிமலை அய்யப்பனை வழிபட அனுமதிக்க முடியாது என்ற தாத்ரிகளின் முடிவை ஏற்றுக் கொள்ளாத உச்சநீதிமன்றம். சபரிமலையில் பெண்களும் வழிபடலாம் என்ற தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், 17-ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. வழிபட வந்த பெண்களை அடித்துத் துரத்தினார்கள் இந்து அமைப்பினர். சில பெண்கள் மட்டும் வழிபட்டார்கள். இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் என பெரிய கட்சிகள் அனைத்துமே சபரிமலையில் பெண்கள் வழிபடக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் இந்நிலையில், தேவசம் போர்ட் என்ன முடிவை வேண்டுமென்றாலும் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள தேவசம் போர்ட் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை நாளை எடுக்கும் எனத் தெரிகிறது. எதிர்ப்பு பெரும் கலவரங்களை உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தில் கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

#சபரிமலை #sabarimala #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence

முதல்வர் கனவால் ஸ்டாலின் தூக்கமின்றி தவிக்கிறார் :அமைச்சர் ஜெயக்குமார்!

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*