சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்!

எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்

கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்!

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’

#Metoo பொய் குற்றச்சாட்டு :சின்மயி மீது கல்யாண் மாஸ்டர் வழக்கு?

கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடக்கூடாது என கட்டுப்பாட்டை கோவில் நிர்வாகம் விதித்து வந்தது. ஆனால்,. உச்சநீதிமன்றம் ஆண், பெண் யார் வேண்டுமென்றாலும் வழி படலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகளும்,பாஜகவும் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால், ஆளும் இடது சாரி அரசின் முதல்வர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவோம் என்று கூறியுள்ளார். நாளை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்க இருக்கும் நிலையில், கோவில் தலைமை பூசாரிகளான தாத்ரிகள், தேவசம் போர்ட் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதே நேரம் இந்து அமைப்பின் தலைவர் பிரவீன் தெக்காடியா கேரளத்தில் நாளையும் நாளை மறு நாளும் இரு நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.கேரள முதல்வரோ “சட்டம் ஒழுங்கை யார் கையில் எடுத்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவோம்” என்றார்.
இதையொட்டி சபரிமலை கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளத்தில் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பல பெண்கள் விரதமிருந்து வருகிறார்கள். பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் அவர்களை நாங்கள் தடுப்போம் என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அறிவித்துள்ளார்கள்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது  என்று நடந்த போராட்டங்களில் பங்கேற்காத பெண்கள் மீது வீடு புகுந்து தாக்குதலும் நடந்துள்ள நிலையில், இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போகிறது கேரள அரசு என்பதே எதிர்பார்ப்பு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*