சபரிமலை பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடிய நான்கு பெண்கள்!

சிந்து புயலில் சிக்கினாரா மீன் ?

#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

டெங்கு பலிகள் -ஸ்டாலின் கண்டனம்!

சபரிமலைக்குச் சென்று பெண்கள் வழிபடுவதை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தடுத்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் கேரள தேவசம் போர் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், நான்கு கேரளப்பெண்கள் சபரிமலையில் அய்யப்பனை வழிபட விரும்புகிறோம் உரிய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவோம் என்று கேரள அரசு கூறிய நிலையில் இந்துக்களைத் தூண்டி சபரிமலையில் பெரும் போராட்டங்களை நடத்தி பெண்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது பாஜக, உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சுமார் 15 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற 13-ஆம் தேதி அந்த வழக்குகளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது. இதனிடையே கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபட விரும்புகிறோம். அதனால், உரியபாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

முதல்வர் மனைவியில் செல்ஃபி மோகம் -VIDEO!இராவணன் ஆவி உயிர்பலி எடுத்ததா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*