#சபரிமலை பெண்களுக்கு எதிராக பெண்கள் பேரணி!

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க உறுப்பினரா? -ஸ்டாலின் கேள்வி!

திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்?

பெண் விடுதலை, பெண் கல்வி போன்றவற்றில் முன்னேறிய தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணிகள் நடந்து வருகிறது.
குறிப்பாக பெரியார் பிறந்த மண், இந்துத்துவத்திற்கு எதிரான பூமி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகத்தின் சென்னையிலும், குமரி மாவட்டத்தின் பாரசாலை பகுதியிலும் பல்லாயிரம் பெண்கள் பங்கேற்கும் சபரிமலை புனிதம் காக்கும் பேரணி நடைபெற்று வருகிறது.
இந்த பேரணியில் செல்கிறவர்கள் பெண்களாக இருந்தாலும், இந்த பேரணியை நடத்துகிறவர்கள் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆண்கள். இவர்கள் ஊர்வலம் செல்வது உச்சநீதிமன்றத்திற்கு எதிராக. சபரிமலையில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அத்தீர்ப்புக்கு எதிராக இந்த பெண்கள் தீபந்தங்களோடும், தீபங்களோடும் ஊர்வலம் செல்கிறார்கள்.
தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் திட்டங்கள், சுற்றுசூழலுக்கு பெரும் கேட்டை உருவாக்கும் திட்டங்களுக்கு எதிராக ஒரு துண்டறிக்கை கொடுத்தால் கூட கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் தமிழக காவல்துறை. சட்டத்திற்கு புறம்பாக உச்சநீதிமன்றத்திற்கு எதிராக, அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக ஊர்வலம் செல்கிறவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.

’குரங்கு சேட்டை’ டிரைவர் சஸ்பெண்ட்!

”பன்னீர் எங்களை முட்டாளாக்கி விட்டார்” -அதிமுக எம்.பி!

வரலாறு பன்னீரை விடுதலை செய்யுமா?-மருதம்

#ayyappan #அய்யப்பன்கோவில் #ஆகமவிதி #சபரிமலை_புனிதம் #பெண்_தீட்டானவள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*