சிந்துவை வைத்து விளையாடும் தினகரன் அணியினர்?

#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

“நாம் அங்கேயே நின்று கொண்டிருக்கிறோமா? ”-பினராயி விஜயன்

சபரிமலை பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடிய நான்கு பெண்கள்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு குண்டை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மீது வீசுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜெயக்குமார் மூலமாக சிந்து என்ற இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படும் விவகாரம் கடந்த சில மாதங்களாகவே அரசல் புரசலாக வெளிப்பட்டாலும், கடந்த பல மாதங்களாக சிந்துவை ஃபாலோ பண்ணி ஜெயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்குமான பழக்கம் எப்படி ஏற்பட்டது. எங்கே சென்றார்கள் எங்கு தங்கினார்கள். என்ற முழு விபரத்தையு விடியோ பதிவாக்கி விட்டார்கள்.
ஆனால், தினகரன் அணி எப்படியாவது ஜெயக்குமாருக்கு எதிரான துருப்புச் சீட்டாக சிந்துவை பயன்படுத்தலாம் என நினைத்திருந்த நிலையில், அந்த பெண்ணின் உறவினர்கள் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நாம் பலியாக வேண்டாம். பாதிக்கப்பட்ட நமக்கு நீதி வேண்டும். என்று சொல்ல அதையே சிந்துவும் சொல்லியிருக்கிறார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது திண்டுக்கல் அருகில் ஒரு அறை எடுத்து தங்கியதாக சிந்துவிடம் பெற்ற தகவலை வைத்து தன் ஆட்களை அனுப்பி அந்த ஹோட்டலில் உள்ள சி.சி.டி.வி புட்டேஜ் வரை தினகரன் அணி வாங்கி வைத்திருக்கிறார்களாம். சிந்து ஜெயக்குமாருக்கு எதிராக இனி பேச முடியாது என்ற மன நிலையில் உள்ள நிலையில், அந்த பெண்ணின் ஒவ்வொரு ஆதாரமாக வெளியிட்டு வருவது தினகரன் அணியினர்தானாம். அவர்கள் இந்த விவகாரத்திற்குப் பின்னர் தாங்கள் இல்லை என்று கூறினாலும், ஜெயக்குமாரை வீழ்த்தியே தீருவது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகி விட்ட தினகரன் அணியினரின் மன நிலையை புரிந்து கொண்ட சிந்து. உங்கள் அரசியலில் பழிவாங்கும் படத்திற்கு என்னை இரையாக்கி விடாதீர்கள். நான் அமைச்சரை நம்புகிறேன் என்று சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இதில் முக்கியமான விஷயமே #Metoo ஹேஷ்டேகில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், சிந்து தான் பாதிக்கப்பட்டதாக, அமைச்சர் ஜெயக்குமாரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக கருதினால் அதை தைரியமாக வெளியில் சொன்னால் அமைச்சர் ஜெயக்குமார் இதில் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த பெண் பேசாத வரை ஒரு எல்லைக்கு மேல் இது பற்றி பேச முடியாது. ஒரு வேளை அமைச்சர் ஆளும் கட்சி என்ற அச்சம் அந்த பெண்ணுக்கு இருக்கும் என்றால் அந்த அச்சம் தேவையற்ற ஒன்று வெளிப்படையாக வந்து பேசினால் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான அரசியல் இயக்கங்கங்கள் இங்கு உள்ளன.

சிந்து புயலில் சிக்கினாரா மீன் ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*