சிந்து புயலில் சிக்கினாரா மீன் ?

#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

யாருக்கு அஞ்சி குற்றாலம் செல்கிறார்கள் தினகரன் எம்.எல்.ஏக்கள்?

முதல்வர் மனைவியில் செல்ஃபி மோகம் -VIDEO!இராவணன் ஆவி உயிர்பலி எடுத்ததா?

ஜெயலலிதா மரணத்தின் பின்னர் மிஸ்டர் க்ளீன் என்ற பெயருடன் ஊடகங்களில் எதிர்க்கட்சித்தலைவரையும், சசிகலா, தினகரனையும் வறுத்தெடுத்த தமிழக மீனவளத்துறை அமைச்சருக்கு குறுகிய காலத்தில் கிடைத்த பெயரை அழித்து விட்டுச் சென்றிருக்கிறது சிந்து என்ற  புயல்.

ஆனால், இந்த சிந்து புயல் எங்கிருந்து வந்தது என்பது பற்றி கடந்த சில நாட்களாகவே ஊடகவியலாளர்களிடம் பல்வேறு  கதைகள் உலவின.  அதிமுக ஒபிஎஸ்- இபிஎஸ்- சசிகலா என பிளவு பட்டு பின்னர் ஒபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஓரணியாக மாறிவிட்ட பின்னரும் கூட முன்னாள் அமைச்சர்கள். எம்.எல்.ஏக்கள் என எவருமே சசிகலாவையோ, தினகரனையோ பெரிதாக ஊடகங்களில் விமர்சிக்கவில்லை. காட்டமாக திமுகவை விமர்சிப்பார்களே தவிற சசிகலா பற்றி எதுவுமே பேச மாட்டார்கள். டெல்லி விவகாகரங்களை கவனித்துக் கொள்ளும் அதிமுகவின் மூத்த தலைவரான தம்பிதுரை கூட யாராவது சசிகலா பற்றி கேள்வி எழுப்பினால் பேசாமல் போய்விடுவார்.

நாளை எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். இந்த ஆட்சி நீடிக்குமோ, நீடிக்காதோ தெரியாது. ஆனால், நிச்சயம் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது அந்த அளவுக்கு மக்கள் வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே அளவு வெறுப்பு மக்களுக்கோ, அதிமுக தொண்டர்களுக்கோ தினகரன் மீதோ சசிகலா மீதோ இல்லை அதனால் அவர்கள்  ஆட்சியைப் பிடிக்கிறார்களோ இல்லையோ அதிமுகவின் பெரும்பான்மை தொண்டர்கள் அவர்கள் பக்கமே சாய்வார்கள். என்ற நம்பிக்கையில் சசிகலா, தினகரன் பற்றி பேசுவதில்லை.

ஆனால், பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டியதும் வாய்க்கு வந்தபடி அனைவரையும் பேசியது அமைச்சர் ஜெயக்குமார்தான். என்ன தைரியத்தில் இப்படி பேசுகிறார் என்று யோசித்த தினகரன் அணி ஜெயக்குமாருக்கு போட்ட ஸ்கெட்ச்தான் சிந்து.

இப்படி ஒரு வில்லங்க விவகாரம் இருக்கிறது என்பதை அரசல் புரசலாக தெரிந்து கொண்ட தினகரன் அணி புயலையும், அவரது ஏழைக் குடும்பத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தனி வீடு எடுத்து குடி வைத்து விட்டார்கள்.  இப்படி சம்பவம் தனக்கு எதிராக இருப்பதைக் கூட புரிந்து கொள்ளாத அமைச்சர் அவர் போக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.

டெலிவரி ஆகும் வரை கவனித்ததோடு  குழந்தை பிறப்புச்சான்றிதழ் வாங்கிக் கொடுத்தது வரை தினகரன் அணியினரே பார்த்துக் கொண்டதாக செய்திகள்  பேசப்படுகிறது. இப்போது தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில், ஜெயக்குமார் மசியா விட்டால் ஊடகங்களின் முன்னால் குழந்தையுடன் தோன்றும் அந்த மாணவி வெளிப்படையாகவே பல விவகாரங்களைப் பேச இருக்கிறாராம். மேலும், நீதிமன்றம் மூலம் மரபணு சோதனை உள்ளிட்ட பல  சோதனைகளை செய்யுமாறு நீதிமன்றத்தையும் நாடலாம் என்கிறார்கள்.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே ஒரு தொகையை பெற்றுக் கொண்டு இதை வைத்து பேரம் பேசும் சூழலுக்கு அந்த குடும்பம் தள்ளப்பட்டதா? என்பதோடு, ஜெயக்குமார் மீது  இன்று ரேப் என்று பாலியல் வன்முறை புகார் கொடுக்கும் முன், தமிழக காவல்துறையில் இது தொட்ர்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளதா? அவர்கள் புகாரை வாங்க வில்லையா? என்ற கேள்விகளும் இதில் உள்ளன.

தேசிய மனித உரிமை ஆணையம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் போதுதான் அதை உரிய விதத்தில் கவனத்தில் கொள்ளும் என்கிறார்கள். எது எப்படி என்றாலும் சிந்து என்ற பெண் வெளிப்படையாக வந்து ஊடகங்களுக்கு முன்னால் இந்த புகாரைச் சொல்வதோடு அறிவியல் பூர்வமாக நிரூபித்தால்தான் உண்மை என்ன என்பது புலப்படும். அதுவரை அமைச்சர் ஜெயக்குமார் தான் குரல் பரிசோதனைக்கு தயார் என்று அறிவித்துள்ளதோடு, தன் குரலே என்கிறார். அந்த மறுப்பையும் நாம் கவனத்தில்தான் கொள்ள வேண்டும்.

#அமைச்சர்ஜெயக்குமார் #Metoo #jayakumar #Minister_jayakumar #Sindhu

பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை!

சபரிமலை – தோல்வியடைந்த பெண் வழிபாட்டு உரிமை!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*