சி.பி.ஐ விசாரணை வளையத்தில் முதல்வர்:பதவி விலகச் சொல்வாரா மோடி?

“ஒரு வருடமாக நிர்மலா வரவில்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

நான் சங்கர் ஆனது எப்படி?

விளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி?- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!

தமிழக முதல்வர் தொடர்புடைய நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழக அரசின் முதல்வரை பதவி விலகுமாறு கோரிக்கை விடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் நான்காயிரத்து எண்ணூறு கோரி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக ஆளுநரிடம் புகார் கூறியது.நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. திமுக எம்.பியான ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என கூறியது. இந்நிலையில், முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என திமுக சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பதவியில் இருக்கும் முதல்வர் மீது எழுந்துள்ள லஞ்ச ஊழல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்றமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு ஆவணங்களை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழக அரசே ஜெயலலிதா மரணத்தின் பின்னர் மோடியின் வழிகாட்டுதலின் படிதான் நடந்து வருகிறது. ஆளும் அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க பல உதாரணங்களைச் சொல்ல முடியும் என்னும் நிலையில், ஊழல் புகாரில் சிக்கி சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ளும் முதல்வர் மற்றும் அவருடைய உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டு அவரை பதவி விலகக் கோருவாரா பிரதமர் மோடி என்ற கேள்வியும் அரசியல் வெளியில் உருவாகி உள்ளது.

ஆளுநர் மாளிகை -நிர்மலாதேவி விவகாரம் முழு தொகுப்பு

#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது!

#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*