ஜெ. சிந்து அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் வன்முறை புகார்?

யாருக்கு அஞ்சி குற்றாலம் செல்கிறார்கள் தினகரன் எம்.எல்.ஏக்கள்?

இராவணவதம் கொண்டாடிய மக்கள் மீது பாய்ந்த ரயில்-Latest Video!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெண் ஒருவருடன் உரையாடும் ஆடியோ பதிவு ஒன்று வெளியானது.#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

அமைச்சர் ஜெயக்குமார் கல்லூரி மாணவி ஒருவருடன் உள்ள தொடர்பு தொடர்பாக அப்பெண்ணின் தாயாருடன் பேசுவதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக  செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் “நான் அப்படி எந்த பெண்ணுடனும் பேசவும் இல்லை. அப்படியான ஒரு விஷயமே நடைபெறவும் இல்லை என்றார். அரசியல் ரீதியாக என்னை வீழ்த்த முடியாதவர்கள் எனது கேரக்டரை டேமேஜ் செய்கிறார்கள். டி.ஜெயக்குமார் என்ற பெயரில் நான் மட்டும்தான் உள்ளேனா? அந்த இடத்தில் யார் பெயரை  வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ள முடியும்.என்று திட்டவட்டமாக அந்த ஆடியோ தகவலை மறுத்துள்ளார்.

ஆனால்,  டி.ஜெயக்குமார் என்ற தந்தை பெயரைக் கொண்ட குழந்தை பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயர் சிந்து என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் வைத்து சிந்து என்பருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பிறப்புச் சான்றிதழ் தெரிவிக்கிறது. அதன் பின்னர் 17-ஆம் தேதி பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து 18-ஆம் தேதி  பிறப்புச் சான்றிதளும் பெறப்படுகிறது.

இந்நிலையில்தான், தனது பெயரை முன் வைத்து வெளியான் ஆடியோவையும், பிறப்புச் சான்றிதழையும் போலினாது எனக் கூறி அமைச்சர் ஜெயக்குமார் மறுத்திருக்கிறார். இந்நிலையி, தேசிய மனித உரிமை ஆணையத்தில் சிந்துவின் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. அந்த புகாரை பெற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் இன்று (22-10-2018) தேதியிட்டு அத்தாட்சி சான்றும் வழங்கியுள்ளது.

ஆனால், அமைச்சர் மீதான புகார் Rape அதாவது பாலியல் வன்முறை என்று கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதில் அமைச்சருக்கோ, மாநில அரசுக்கோ நோட்டீஸ் அனுப்பினால் தமிழக அரசு மிகப்பெரிய தலைகுனியை சந்திக்க நேரிடும். ஆனாலும், சிந்து என்பவர் யார்? என்ற கேள்வியிலும் பல மர்மங்கள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.

#அமைச்சர்ஜெயக்குமார் #Metoo #jayakumar #Minister_jayakumar #Sindhu

பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை!

சபரிமலை – தோல்வியடைந்த பெண் வழிபாட்டு உரிமை!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*