தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு கொலை நடந்ததில்லை!

அமைச்சர் ஜெயக்குமார் ராஜிநாமா?

ரபேல் ஊழலுக்கு அருகில் வந்தால் பழிவாங்கப்படுவார்கள்!

தீர்ப்பு + சிந்து + ஜெயக்குமார் =பகடையாக உருட்டப்படும் சிந்து?

தமிழகத்தில் எத்தனையோ கொலைகள் நடக்கின்றன, முன்னரும் நடந்திருக்கின்றன, இனியும் நடக்கும் ஆனால், ஒரு 13 வயது குழந்தையின் தலையை தனியாக துண்டித்து அதை எடுத்துச் சென்று புதருக்குள் வீசி விட்டு போலீசில் சரணடையும் தைரியம் ஒரு கொலைகாரனுக்கு உருவாகிறதென்றால், இந்த சரணடைதலில் உள்ள தைரியமும், துணிச்சலும் எங்கிருந்து இந்த கொடூர கொலையாளிகளுக்கு வருகிறது என்பதுதான் கேள்விக்குறி?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தலைவாய்பட்டியையொட்டிய சுந்தரபுரத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சாமிமுத்து, சின்னப்பொண்ணு தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். இதில் கடைசி மகள் ராஜலட்சுமிக்கு 13 வயது. அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இவருடைய வீட்டிற்கு அருகில் தலித் அல்லாத தினேஷ்குமார் என்ற கார்த்திக் 27 வயது நிரம்பிய இவருக்கு சாரதா என்ற மனைவி இவர்களுக்கும் நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.


தனது நான்கு வயது குழந்தையோடு விளையாடும் பக்கத்து வீட்டு 13 வயது குழந்தை ராஜலட்சுமி மீது காம உணர்வு எழுந்திருக்கிறது. ராஜலட்சுமியிடம் சில்மிஷம் செய்ய துவங்கியிருக்கிறான் தினேஷ். 13-வயது ராஜலட்சுமியால் துவக்கத்தில் தினேஷின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த திங்கள் இரவு தன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ராஜலட்சுமியை பாலியல் வன்முறை செய்ய தினேஷ் முயன்ற போது ராஜலட்சுமி கத்தி அழுதிருக்கிறார். திமிரிய ராஜலட்சுமியை அரிவாளால் தலையை வெட்டி , அதை துண்டாக்கி எடுத்த தினேஷ் தலையோடு தெருவுக்குள் நுழைந்து ஓட முயல தினேஷ்குமாரின் மனைவியும், அவரது தம்பியுமே அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதில் இரண்டு விதமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒன்று குழந்தையின் தலையை வெட்டி எடுத்து வந்து போலீசில் சரணடைந்தார் என்பது ஒரு வெர்ஷன். இன்னொன்று, தலையை வெட்டி எடுத்து தப்பிய போது அவர் மனைவியாலும், தம்பியாலும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார் என்பது இன்னொன்று. எது எப்படி என்றாலும் இத்தனை கொடூரமான சமூகத்திலா நாம் வாழ்கிறோம். இது போன்ற கொடிய குற்றவாளிகளை சாதியும் மதமும் காப்பாற்றி விடக்கூடாது. தினேஷ் போன்ற கொடியவர்கள் தலித் குழந்தைகளுக்கு அல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்குமே விரோதிகள்.

#dalit_murder #தலித்குழந்தைகொலை #tamilnews #tamilnadu_news

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*