தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

Chennai: Sidelined AIADMK leader T T V Dhinakaran after winning the RK Nagar constituency bypoll, in Chennai on Sunday. PTI Photo (PTI12_24_2017_000147B) *** Local Caption ***

திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்?

’குரங்கு சேட்டை’ டிரைவர் சஸ்பெண்ட்!

”பன்னீர் எங்களை முட்டாளாக்கி விட்டார்” -அதிமுக எம்.பி!

வரலாறு பன்னீரை விடுதலை செய்யுமா?-மருதம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர் தினகரனையும் தவிர்த்து விட்டு ஒரு தேர்தல் கணிப்பு தமிழகத்தில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் சி வோர்ட்டர், ரிபப்ளிக் தொலைக்காட்சியும் இணைந்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பை வெளியிட்டது அதில், பாஜக 8.8 % வாக்குகளையும், காங்கிரஸ் 3.7 % வாக்குகளையும், திமுக 39.4 % வாக்குகளையும், அதிமுக 23.5 வாக்குகளையும், மற்றவர்கள் 24.7%வாக்குகளையும் வெல்வார்கள் என கூறியிருந்தது.
சீட்டுகள் அடிப்படையில் அந்தக் கருத்துக்கணிப்பு பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 0 என்றும், திமுக 28 தொகுதிகளையும், அதிமுக 9 தொகுதிகளையும் மற்றவர்கள் 0 என்றும் வெளியிட்டிருந்தது. இந்தக் கருத்துக்கணிப்பு எத்தனை போலியானது என்பதை சாதாரண அறிவுள்ளவர்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே 3 சதவீத வாக்குகள் உள்ளது. பெரும்பலான தேர்தல்களில் இதை அக்கட்சி நிரூபித்திருக்கும் நிலையில். பாஜக தன் வாக்கு வங்கியை இன்னும் முழுமையாக நிரூபிக்கவில்லை. ஆனால் 8.8 சதம் அதற்கு இருப்பதாக ரிபப்ளிக் டிவி கூறுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவு ஊடகங்கள் 13%வாக்கு வங்கி பாஜகவுக்கு உள்ளதாக கூறின. அனால் வாக்குகள் சிதறியதால் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பாஜக வென்றது. பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் பாஜக செல்வாக்குள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்ல வில்லை. பொன்.ராதாகிருஷ்ணணின் சொந்த தொகுதியில் கூட பாஜக தோல்வியை தழுவியது. ஆக, தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அமையா விட்டால் குமரி மாவட்டத்தில் மட்டும் சில தொகுதிகளில் பாஜக வெல்லும் இதுதான் நிலை.

தினகரனை ஓரம் கட்டிய கருத்துக்கணிப்பு!

திமுக அதிமுகவைப் பொருத்தவரை இந்த இரு கட்சிகளுமே 40 சத வீத வாக்குவங்கியை பங்கிட்டுக் கொள்வார்கள். இந்த இரு கட்சிகளும்தான் அதிக அளவு வாக்குவங்கியைக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக அணி என்று ஒபிஎஸ்- இபிஎஸ் அணியை வைத்து ரிபப்ளிக் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. ஒபிஎஸ்- இபிஎஸ் இருவரும் தங்கள் பலத்தை நிரூபித்த ஒரே தேர்தல் ஆர்.கே. நகர் தேர்தல்தான். ஆனால், அதே தேர்தலில் தனித்து நின்று ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று காட்டினார் தினகரன். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திமுகவுக்கு கடுமையான போட்டியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், தேர்தலை சந்திப்பதில் ஒபிஎஸ்- இபிஎஸ் தரப்பு தயக்கம் காட்டுவதால் மழையை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படும் நிலையில், தனித்து நின்று வென்று காட்டியிருக்கும் தினகரனை சி வோட்டர்ஸ், ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு கண்டு கொள்ளவில்லை. ஆனால், தேர்தலில் தோல்வியடைந்த தரப்பான, தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் உள்ளாட்சி தேர்தலைக் கூட நடத்தாமல் தள்ளிப்போட்டு வரும் ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணி அதிமுக 23.5 வாக்குகளையும் பெற்று 9 தொகுதிகளிலும் வெல்லும் என்பது வேடிக்கையாக இல்லையா?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி என்று தன்னை நிரூபித்துக் கொண்டுள்ள தினகரனை தவிர்த்து விட்டு தமிழக அரசியலில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிடுவது போலியான ஒன்றாகவே இருக்கும்.

#தினகரன் #அம்மா-மக்கள்-முன்னேற்றக்கழகம் #டிடிவி-தினகரன் #அதிமுக #ஒபிஎஸ்_இபிஎஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*