திராவிட இயக்கமும் மீனாட்சி தாயாரும்!

ஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது!

குஜராத்தில் இருந்து வெளியேறும் வட மாநிலத்தவர்கள்!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் செல்வாக்குப் பெரும் வரை மீனாட்சியம்மனும் புகழ் பெறவில்லை.போதுமான வருமானமும் இல்லை. திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தான் அக்காலத்தில் வருவாய் ஈட்டிக் கொண்டிருந்ததாம். அந்த திருப்பரங்குன்றம் முருகன் படியளந்து மீனாட்சியம்மன் ஒரு ஓரமாக வாழ்ந்து கொண்டிருந்தார். தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை பேசி திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பின்னர்தான் மீனாட்சித் தாயாருக்கு வருவாய் அதிகரித்தது.

ஒரு முறை கதாசிரியர் ஆர்.செல்வராஜிடம் ஒரு நீண்ட நேரகாணல் செய்தேன் அதில் அவர் சொல்வார் “மகன் தான் அம்மாவுக்கு சோறு போடுகிறான்” என்று அதாவது அவரது இளம் பருவத்தில் 70–பதுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் வருவாயில் மீனாட்சி வாழ்கிறாள் என்பதை அப்படிச் சொன்னார்.

திராவிட இயக்கம் வலுப்பெற்ற இந்த நாற்பதாண்டுகளில் மீனாட்சி தன் சொந்த காலில் சம்பாதித்தாள். ஒரு ஜூனியர் எச்.ராஜா சொல்றார் “மீனாட்சியம்மன் கோவிலில் 50 ருபாய் வருமானம் வருகிறதாம்” அடேய் . ஒரு கோட்பாட்டை கொள்கையை பேச ஆயிரம் பக்க ஆய்வுகளும், ஆவணங்களும் தேவை. ஆனால் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை பேச அயோத்தி முதல் கன்னியாகுமரி வரை எந்த ஆவணங்களும் தேவையில்லை. இதுதான் ராமர் சேது கால்வாய் என்று தெங்கம்புதூர் செம்மண் கரடைக் காட்டினால் கூட வாய்பொளந்து கேட்க ஒரு கூட்டம் இருக்கிறது.

தமிழகத்தில் இருந்த வருவாய் வரும்  கோவில்களை எல்லாம்  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு உயர்சாதியினர்  அவர்களின் தொப்பைகளை வளர்த்துக் கொண்டதோடு, கோவில்களிலும் பாரபட்சம் காட்டி வந்தார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவில் வந்த பிறகுதான் கோவில் வருமானம் மக்கள் சொத்தானது.

இன்று அதே கோவில்களை அதே கூட்டம் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. அப்படி பரப்பப்படும் புரளிகளில் ஒன்றுதான் மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றியதும்.

#மீனாட்சியம்மன் #Madurai_Meenakshi_Amman_Temple #Madura_Meenakshi

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*