திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்?

”பன்னீர் எங்களை முட்டாளாக்கி விட்டார்” -அதிமுக எம்.பி!

வரலாறு பன்னீரை விடுதலை செய்யுமா?-மருதம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூருக்கும், மறைந்த அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸுடைய தொகுதியான திருப்பரங்குன்றத்திற்கும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது:-
“சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மிசோராம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் 18 இடங்களுக்கு முதல் கட்டமாக நவம்பர் 12-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். மத்தியபிரதேசம், மிசோராம், மாநிலங்களில் நவம்பர் 28-ஆம் தேதியும், ராஜஸ்தான் , தெலங்கனா மாநிலங்களில் டிசம்பர் 7-ஆம் தேதியும், வாக்குப்பதிவு நடைபெறும். சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மிசோராம், தெலங்கனா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கர்நாடக மாநிலம் ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-வது வாரத்தில் நடைபெறும்”என அறிவித்தார் தலைமை தேர்தல் அதிகாரி.
ஆனால், தமிழகத்தின் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இப்போது அறிவிக்க முடியாது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கவில்லை. இப்போது தேர்தல் நடத்த முடியாது என்று மட்டும் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் களத்தில் நிற்கின்றன. ஆனால், மழையை காரணம் காட்டி தமிழகத்தில் தேர்தலை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதியதாகவும் அதை ஏற்றுக் கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் தேதியை அறிவிக்கவ்ல்லை என்றும் கூறப்படுகிறது.
கன மழை பெய்யும் என்று அரசு அறிவித்திருந்த ரெட் அலர்ட்டை திரும்பப்பெற்றுள்ளது. மழை போதுமான அளவு கூட பெய்யவில்லை. இந்நிலையில், மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கும் அளவுக்கு நிலமை உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு இடைத்தேர்தல்களையும் அதிமுக எதிர்கொள்ள அஞ்சுகிறது என்பதே யதார்த்தம். இன்னொரு பக்கம் இரு தொகுதிகளையும் பாஜகவும் குறிவைக்கிறது. அதாவது தங்கள் சொந்த பலத்தில் இல்லாமல் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து இரு தொகுதிகளையும் கைப்பற்றி தாங்களுக்கும் தமிழாக்த்தில் வலு இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால் பாஜக இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் அவசரம் காட்டவில்லை அதனால் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

#ADMK #OPanneerSelvam KCPalanisamy #தேர்தல்_கமிஷன் #திருவாரூர்_திருப்பரங்குன்றம்_இடைத்தேர்தல்கள்

அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு!

கன மழைக்கு வாய்ப்பில்லை – ’தமிழ்நாடு வெதர் மேன்’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*