தீர்ப்பு + சிந்து + ஜெயக்குமார் =பகடையாக உருட்டப்படும் சிந்து?

 

#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரமான எதிரிகளும் இல்லை என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கூற்று யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ அதிமுகவினருக்கு அது அதிகம் இன்றைய தேதியில் பொருந்திப் போகிறது.

இன்னும் சில நாட்களில் தினகரன் அணி எம்.எல்.எக்கள் தகுதி நீக்க வழக்கின் மீதான தீர்ப்பு வெளிவர இருக்கும் நிலையில், இந்த ஆட்சியை எந்த வகையில் காப்பாற்ற வேண்டினாலும் இனி தினகரன் அணியினரின் ஆதரவில்லாமல் இதைக் காப்பாற்ற முடியாது.

தீர்ப்பு ஆளும் அரசுக்கு சாதகமாக வந்தால் கூட இந்த ஆட்சி நீடிப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லும் தினகரன் அணியினர் ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும், திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கிலும்  உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் வைத்து வாதாடினால் தினகரன் அணி வென்று விடும்.

தீர்ப்பு தினகரனுக்கு ஆதரவாக வந்து ஆளும் அரசு ஆட்டம் காணும் சூழல்  உருவாவதற்கான வாய்ப்புகளே இப்போதைக்கு அதிகம் என்னும் நிலையில், பாஜக தினகரனை வழிக்குக் கொண்டு வரும்  வேலையை இப்போதே துவங்கி விட்டார்கள்.

இத்தகைய ஒரு சூழலை ஏற்கனவே எதிர்பார்த்த தினகரனை சில மீடியேட்டர்கள் தொடர்பு கொண்டதும். அவர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்து அது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இப்போதைக்கு தீர்ப்பு வரட்டும்  நம்மை நம்பித்தான் இந்த ஆட்சி என்ற நிலை வரும் போது அரசில் பங்கேற்காமல் நாம் முழுமையாக ஆட்சியை ஆதரிப்போம். ஆனால், கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தும் தினகரன் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை தினகரன் அணியினர்  வைப்பார்கள் எனத் தெரிகிறது.

பாஜகவுக்கு வரவிருக்கும்  நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்  அதிமுக, பாஜக கூட்டணி வென்று அந்த ஆதரவு அப்படியே பாஜகவுக்கு வேண்டும் என்பதுதான் அவர்கள் திட்டம். எனவே இப்போதைக்கு தினகரனை சமாதானப்படுத்தும் நக்ர்வுகளை பாஜக துவங்கியுள்ளதாம்.

சபரிமலை பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடிய நான்கு பெண்கள்!

இராவணவதம் கொண்டாடிய மக்கள் மீது பாய்ந்த ரயில்-Latest Video!

பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை!

சபரிமலை – தோல்வியடைந்த பெண் வழிபாட்டு உரிமை!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*