தேவர் ஜெயந்தி -ஓபிஎஸ்-இபிஎஸ் பிளெக்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தகர்ப்பு! VIDEO

தேவர் ஜெயந்தி -பசும்பொன்னில் ஓபிஎஸ்-இபிஎஸ் பேனர், பிளெக்ஸ் அனைத்தும் தகர்ப்பு!

தேவர் ஜெயந்தி -பசும்பொன்னில் ஓபிஎஸ்-இபிஎஸ் பேனர், பிளெக்ஸ் அனைத்தும் கிழிப்பு!

Posted by Tamilarasial on Tuesday, October 30, 2018

தன் மகனின் கட் அவுட்டுக்கு பாலூற்றும் ஏழை ரசிகனை என்ன செய்வார் சிவக்குமார்?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 55-வது ஆண்டு நினைநாள் இன்று தமிழகம் முழுக்க அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் அவரது சமாதி உள்ள இடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

அரசு விழாவாக நடத்தப்படும் தேவர் ஜெயந்தி விழா அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் காலை வந்து அஞ்சலி செலுத்து விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களின் வருகையையொட்டி பசும்பொன்,மதுரை உள்ளிட்ட பல இடங்களில் விதிகளை மீறி பிளெக்ஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் தினகரன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவர்களுக்கும், ஒபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் வெடித்த நிலையில் ஒபிஎஸ் -இபிஎஸ் பிளெக்ஸ் போர்டுகள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டன.
ஒபிஎஸ் இபிஎஸ் இருவருமே மக்கள் எதிர்ப்பை நேரடியாக எதிர்கொள்ள நேரிடும் என்றும் காலையே வந்து சென்று விட்ட நிலையில், விளம்பரப்பலகைகளை கிழித்து உடைத்தவர்கள் தினகரன் ஆதரவாளர்கள் என அதிமுகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

#Pasumpon_deavar_jayanthi #pasumpon_devar #Muthuramalingadevar #devar_cast

 

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பாஜகவில் இணைந்தார்.

அமித்ஷாவுக்கு நெத்தியடி பதில் கொடுத்த பினராயி விஜயன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*