நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

சபரிமலை தொடர்பான செய்திகள்

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்ய மறுத்ததாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நேற்று காலை செய்து செய்யப்பட்டார் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால். அவர் மீது தேசத்துரோக வழக்கு 124 A போடப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுவரை எந்த ஒரு ஊடகவியலாளரும் கவர்னரின் புகாரின் பேரில் கைது செய்யப்படவில்லை. நக்கீரன் கோபால் கைதுதான் முதல் கைது என்கிறார்கள்.

நீதிமன்றத்தில் நக்கீரன் கோபாலுக்காக வழக்கறிஞர் பெருமாள் ஆஜராகி இருந்தார். நக்கீரன் கோபாலுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் கேட்ட ஒரு கேள்விதான் இந்த வழக்கை நொறுக்கியது. “ நக்கீரன் கோபால் எழுதிய கட்டுரையால் ஆளுநரின் பணி தடுக்கப்பட்டிருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதத்தில் அவரது எந்த பணியை தடுத்தார்? ஆளுநரால் அவரது எந்த பணியை செய்ய முடியவில்லை என்பதை விளக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு போலீசிடம் பதில் இல்லை.

கோபால் மீது தொடரப்பட்ட வழக்கில் புகார் மனு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கும் அரசுத்தரப்பில் இருந்து எந்த ஒரு தெளிவான பதிலும் இல்லை. மேலும், ஹிந்து ஆசிரியர் என்.ராம் ஆஜராகி “ஊடகங்களில் எழுதுவதற்கு எதிராக 124 பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதை அனுமதித்தால் நாடு முழுக்க இதை முன்னுதாரணமாக வைத்து கைதுகள் நடக்கும். அரசியல் சாசனம் 19 -A பிரிவு எழுதும் உரிமையை உறுதி செய்கிறது அதை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும்” என்றார். பின்னர் நீதிபதி நக்கீரன் கோபாலை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.
இந்த வழக்கில் கவர்னரின் செயலாளர் தான் புகார் மனுதாரர். ஆளுநர் நேரடியாக புகார் கொடுக்காமல் ஆளுநர் மாளிகை அட்மினை அனுப்பி புகார் பதிவு செய்திருக்கிறார். அதற்கான பரிந்துரையை மட்டும் நேரடியாக முதல்வரிடம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்ததாக தெரிகிறது. ஆளுநரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதனும் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் என்கிறார்கள் விஷமறிந்தவர்கள்.ஆனால், எது எப்படி என்றாலும். நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய பவர்புரோக்கிங் வழக்கின் சந்தேக நிழல் கவர்னர் மீதும் ஆழப்படிந்து விட்டது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகத்தின் கோடிக்கணக்கானவர்களுக்கு நக்கீரனின் அந்த கட்டுரை சென்று சேர்ந்து விட்டது. இந்த கைதின் மூலம் வாயை அடைத்து விடலாம் என்று திட்டமிட்டவர்கள் மக்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கிறார்கள். ஆறு மாதங்களாக ஏன் நிர்மலா தேவிக்கும் இந்த வழக்கில் கைதாகி உள்ள ஏனைய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்களது ஜாமீன் மனுவுக்கு அரசு ஏன் இத்தனை எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் மூவர் மட்டும்தான் சந்தேக நபர்களா மதுரை காமராஜ் பல்கலைக்கழக அதிகாரிகள், கவர்னர் மாளிகையின் அதிகாரிகள் ஏன் கொண்டு வரப்படவில்லை என்ற கேள்விகளும் பொதுவெளியில் எழுப்படுகின்றன.

தேன் கூட்டில் கைவைத்து கூட்டைக் கலைத்து தேனீக்களுக்கு மத்தியில் சிக்கி சின்னா பின்னமானது போலாகி விட்டது நிலமை. ஆனால் அசிங்கப்பட்டது ஆளுநரா அல்லது அவரது அட்மினா என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.

#NakkeeranGopal #shamelessmodi #MyCMisAThief#MyGovernorisaPervert
#NakkeeranGopal #MKStalin #puppetgovernment #shamelesstn#modiatrocities #fascistmodi #shamelessmodi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*