நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது ஏன்?

சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று காலை செய்யப்பட்ட நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் மீது போலீசார் தேசத்துரோக வழக்கு பதிந்துள்ளனர்.
தமிழக கல்லூரி மாணவிகளை யாரே பெரிய இடத்து மனிதர்களுக்காக சப்ளை செய்ய புரோக்கர் வேலை பார்த்து போலீசால் கைது செய்யப்பட்ட பேரா.நிர்மலா தேவி கோர்ட்டுக்கு கொண்டு வருவதையும் போவதையும்தான் ஊடகங்கள் காட்டிக் கொண்டிருந்த நிலையில், அவர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கிறது,
அவர் நான்கு முறை கவர்னர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்திருக்கிறார் என்ற தகவல் உள்ளிட்ட பல அதிர்ச்சிரமான தகவல்களை தன் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக நக்கீரன் செய்தி வெளியிட்டது.தமிழ் புலனாய்வு இதழியலில் நக்கீரனின் பணி ஆழமானது. இதனால் நக்கீரன் இதழும் அதன் ஆசிரியர் அண்ணன் கோபால் உள்ளிட்டோர் சந்தித்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.ஜெயாவின் ஆட்சிக்காலத்தில் உயிர்பலிகளும் உண்டு. இப்போது நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கியிருக்கும் ஆளுநர் இது பற்றி யாரும் பேசக்கூடாது என விரும்புகிறார்,நக்கீரன் இதழ் தொடர்ந்து நிர்மலா தேவியை ஃபாலோ பண்ணி அவரது வாக்குமூலத்தை வெளியிட்டதுதான் பன்வாரிலால் புரோகிதை உஷ்ணமாக்கியிருக்கிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு புனையப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நிர்மலா தேவிக்கும் கவர்னருக்குமான தொடர்பு வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ஆட்கள் மூலம் பேரம் பேசியதாக தெரிகிறது. இந்த தகவல்களை வெளியிட்டதற்காக தேசத்துரோக வழக்கு கோபால் மீது போடப்படுகிறது.ஊழலில் ஊறித்திளைக்கும் ஒரு அரசின் முதல்வரும், நிர்மலா தேவியின் புரோக்கர் சர்ச்சையில் சிக்கிய கவர்னரும் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை தேசத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளாக மாற்றுகிறார்கள்.

#பாலியல்_குற்றச்சாட்டில்_கவர்னர் #நிர்மலாதேவி_பன்வாரிலால்-புரோகித்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*