நக்கீரன் கோபால் விடுதலை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்பாக செய்தி வெளியிட்டமைக்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை எழும்பூர் நீதிமன்றம் சிறையில் அடைக்க மறுத்து விடுதலை செய்து விட்டது.
கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்ய பேசியதாக சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவிக்கும் கவர்னர் பன்வாரி லால் புரோகித்திற்கும் உள்ள தொடர்பு குறித்து நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்திக்காக கைது செய்யப்பட்ட நக்கீன் கோபாலை எழும்புர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால், ஆளுநர் மாளிகையையோ மிரட்டவில்லை. என்று கூறி சிறையில் அடைக்க மறுத்து விட்டார். போலீஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி நக்கீரன் கோபாலை நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்தார்.

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*