“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்!

தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி!

இந்து என்பது நம் அடையாளம் :அதை வைத்து பாஜகவிடம் சமர் புரிவோம் -ராஜன்குறை கிருஷ்ணன்
பாஜக என்பது பக்தர்களின் கட்சி அல்ல; இந்து மத அடையாளவாதக் கட்சி.
காங்கிரஸ் கட்சி, இடது சாரி கட்சி, பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசியல் சட்டப்படி இந்து என்ற அடையாளம் உள்ளவர்கள்தான். இந்து அடையாளம் சுமக்க நாம் கடவுள் நம்பிக்கையோ, பக்தியோ கொள்ள வேண்டிய, அதை நிரூபிக்க வேண்டிய இல்லை. நாம் இந்து என்பது குடிமை, அதாவது சிவில் அடையாளம்தான்.

அதற்காக இந்து என்றால் ஜாதி படிநிலையை ஆதரிப்பதாகவெல்லாம் அர்த்தம் தேவையில்லை. இந்துக்களில் ஜாதி படிநிலையை ஆதரிக்காத ஆச்சாரியர்கள், இறையியலாளர்கள் இருந்துள்ளார்கள். நாம் ஜாதி மறுப்பு இந்துவாக இருக்க எந்தத் தடையுமில்லை.

நாம் துணிந்து நானும் இந்துதான்; பெண்கள் சபரிமலைக்கு செல்வதை இந்து என்ற முறையில் ஆதரிக்கிறேன் என்று தெளிவாகப் பேச முடியும் போராட முடியும்.

நாம் தெளிவாக களத்தில் நானும் இந்துதான் என்று நின்றால்தான் பாஜக-வை வெல்ல முடியும் என்பதே என் எண்ணமாக இருக்கிறது.

சுப்பரமண்யம் சுவாமியேசபரிமலை பிரச்சினை இந்து மறுமலர்ச்சிக்கும், இந்து அடிப்படை வாதத்திற்கும் நடக்கும் பிரச்சினை என்று கூறியுள்ளதாக நியூஸ்-18-இல் பார்த்தேன்.

சபரிமலை வைக்கம் ஆகிறதா, அல்லது அயோத்தி ஆகிறதா என்பது நம் கையில்தான் இருக்கிறது. சி.பி.எம் கட்சி அதன் சொந்த நலன் கருதி விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். தன் முழு பலத்தையும் காட்டி பெரியதொரு அணிதிரட்டலை நிகழ்த்த வேண்டும்.

கேரள காங்கிரஸ் நிலைபாடு கேவலமாக இருக்கிறது. அயோத்தியில் பட்ட அனுபவம் அவர்களுக்கு எந்த பாடத்தையும் கற்பிக்கவில்லை.

இந்து அடையாளம் எடுப்பது சமரசத்திற்கல்ல: பாஜக-வுடன் சமர் புரியவே என்பதை ராகுல் காந்தியும் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை பாஜக-விடம் கொடுத்துவிட்டு சென்றுவிடலாம்.
பிரச்சினையின் அடிப்படை நவீன அரசு, நீதிபரிபாலனம் குடிநபர் என்ற குடிமை உள்ளீட்டை மட்டுமே நம்புகிறது.

ஆனால் நவீன அரசின் அடித்தளமான தேசம் வேறு அடையாள உள்ளீடுகளை அனுமதிக்கிறது.

அதில் பன்மையா, ஒற்றைத்தன்மையா; விசாலமானதா, குறுக்கலானதா; பிறவற்றை அரவணைப்பதா; விலக்குவதா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கும். அமெரிக்காவில் கறுப்பர்கள் மீதான வெறுப்பு இன்றும் கடுமையாக இருக்கிறது. அவர்கள் குடிநபர்களாக காவல்துறையால் பல சமயங்களில் நடத்தப்படுவது இல்லை.

இந்துத்துவம் தேசத்தை ஒற்றைப் பரிமாண இந்து அடையாளத்தில், வரலாற்று மத அடையாளம் சார்ந்து கட்டமைக்க விரும்புவது.

அதற்கு அடிப்படையாக சென்சஸில் பதியப்படும் சிவில் அடையாளமான பன்மைத்துவும் கொண்ட இந்து அடையாளத்தை அரசியல்படுத்த விரும்புகிறது. கவனிக்க வேண்டிய முக்கிய புள்ளி, சிவில் வரலாற்று அடையாளமில்லாமல் அரசியல் நிகழ முடியாது.

ஆனால் அந்த புதிய அரசியல் மற்றும் சிவில் அடையாளமான இந்து எந்த அளவு மரபுகளை, சனாதனத்தை சார்ந்து இருக்க வேண்டும், எந்த அளவு புதிய அரசியல் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதில் காவிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து கிடையாது. சந்தர்ப்பவாத நிலைபாடுகள்தான் உண்டு.

எனவேதான் இந்து என்ற சிவில் அடையாளத்தின் களத்தில் அனைவரும் உள்நுழைந்து சனாதனத்திற்கு எதிராக போராட வேண்டும். அப்போது காவிகளின் உள் முரண்பாடு அம்பலமாகிவிடும். காவிகளின் ரகசிய அடிப்படை பார்ப்பனீயம்தான், சனாதனம்தான் என்பதை வெளிக்கொண்டுவர முடியும்.

#Rajan_kurai_krishnan #ராஜன்குறை_கிருஷ்ணன் #சபரிமலை #sabarimala 

#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்!

நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*