பட்டேல் சிலை  திறப்பு –ராகுல் விமர்சனம்! #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி

பத்திரிகையாளர்கள் கொலை :மோசமான சாதனை படைத்த இந்தியா!

பாஜக தலைவர்கள் தமிழகத்தின் வரப்பிரசாதம் -பெருமித பொன்னார்

கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

182 அடி உயரமுள்ள பட்டேல் சிலையை  பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் விமர்சனங்களை மோடி மீது வைத்துள்ளார்.

குஜராத் நர்மதா மாவட்டத்தில் அமைந்துல்ள சர்தார் சரோவர் அணை அருகே சாதுபேட் என்னும் இடத்தில் 182 அடி  உயரமுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை  “ஒற்றுமையின் சிலை” என்ற அடையாளத்துடன் அமைத்துள்ளது ஆளும் பாஜக அரசு. இது, அமெரிக்க சுதந்திர தேவி சிலையை விட இரு  மடங்கு உயரம் கொண்டது.

இது தொடர்பாக டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ள ராகுல்காந்தி:-

“சர்தார் வல்லபாய் பட்டேன் உதவியால் கட்டி எழுப்பப்பட்ட இந்திய அரசின் துறைகள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு வரும் நிலையில் அவருடைய சிலை திறந்து  வைக்கப்பட்டுள்ளது.ஆனால், பட்டேல் உருவாக்கிய திட்டங்களை அழிப்பது தேசத்துரோகத்திற்கு சற்றும் குறைந்தது கிடையாது”என்றுள்ளார்.

இன்னொரு பதிவில்,

சர்தார் பட்டேல் தேசபக்தர், அவர் சுதந்திரமான ஒற்றுமையான மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவிற்காகவும் போராடியவர். இரக்கம் மற்றும் கருணையைக் கொண்ட காங்கிரஸ்காரர் .சகிப்புத்தன்மையின்மை, மதவாதத்தை அவர்சகித்துக்கொள்ளவில்லை.  அவரது இந்த பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்கிறேன்”என்று   தெரிவித்துள்ளார்.

#sardar_patel #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி #Statue_Of_Unity #Sardar_Sarovar_Dam #Height_kitni_hai#Sarda_Vallabhbhai_Patel #Gujarat_govt

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*