பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

தேவர் ஜெயந்தி -ஓபிஎஸ்-இபிஎஸ் பிளெக்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தகர்ப்பு! VIDEO

தன் மகனின் கட் அவுட்டுக்கு பாலூற்றும் ஏழை ரசிகனை என்ன செய்வார் சிவக்குமார்?

உலகின் பிரமாண்ட சிலை என்று குஜராத்தில் நிறுவப்பட இருக்கும் பட்டேல் சிலையில் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிலைக்கான பெயரை தமிழில் “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என்று கொடூரமான தமிழில் பதிந்துள்ளது.

இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை ஆக்ரமித்து வைத்துள்ளதோடு அந்த பகுதிகளில் தப்புத்தப்பாய் தமிழ் பெயர்களை எழுதி வைப்பது போல குஜராத் பட்டேல் சிலையிலும் தமிழை ஏதோ இந்திக்காரர்கள் அரைகுறை தமிழில் பேசுவது போல எழுதி வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக எழுத்தாளர் ஆழி.செந்தில்நாதன் தன் முகநூலில் எழுதியுள்ள பதிவில்,
”மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கையென்றால், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது “ஸ்டேட்டுக்கே ஒப்பி .யூனிட்டி” என்று ஆகியிருக்கிறது!


(அரபி, உருது படிக்கமுடியவில்லை)
பாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட “ஒற்றுமை சிலை” என்று சரியாக வருகிறது.சரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்!
பாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி!இந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).
ஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் “ஆட்சி” மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.
இந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்!

#Statue_Of_Unity #Sardar_Sarovar_ Dam #Height_kitni_hai #Sardar-Vallabhbhai_Patel #Gujarat_govt

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*