பத்திரிகையாளர்கள் கொலை :மோசமான சாதனை படைத்த இந்தியா!

பாஜக தலைவர்கள் தமிழகத்தின் வரப்பிரசாதம் -பெருமித பொன்னார்

கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் நிகழ்வுகளில் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு (CPJ) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலக அளவில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த பட்டியலில் இந்தியா இடம் பெற்று வருகிறது.இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கொலையில் தீர்க்கப்படாத 18 வழக்குகள் உள்ளதாக குறிப்பிடபட்டு உள்ளது.
இந்த பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும், 2-வது இடம் சிரியாவுக்கும், 3-வது இடம் ஈராக், தெற்கு சூடான் என இந்த பட்டியல் நீண்டு செல்கிறது. நவம்பர் 2 ம் தேதி ‘பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டும் பெரிய நடவடிக்கைகள் இல்லை.
கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் பெரும்பாலானவர்கள் மாநில மொழிகளில் எழுதக் கூடியவர்கள். ஆங்கில மொழியில் எழுதுகிறவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பணிப்பாதுகாப்பு உள்ளது. ஆனால், மாநில மொழிகளில் எழுதுகிறவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
ஊடகச் சுதந்திரம் என்பது மக்கள் சுதந்திரம். அதை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை!

 

#ஊடக_சுதந்திரம் #பத்திரிகையாளர்_சுதந்திரம் #Freedom_ofthe_press #Press_Freedom #கவுரி_லங்கேஷ் #கல்புர்கி #கோவிந்த்_பன்சாரே

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*