பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை!

சபரிமலை – தோல்வியடைந்த பெண் வழிபாட்டு உரிமை!

“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்

காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு!

கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்!

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என துருக்கு சவுதி அரேபிய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றி வந்த ஊடகவியலாளர் ஜமால் கசோகி சவுதி அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தார். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் சென்ற ஜமால் கசோகி காணாமல் போனார்.
அவர் காணாமல் போனது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சவுதி அரசுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இது தொடர்பாக பேச சவுதி அரேபியாவுக்குச் சென்றார். கசோகி கொல்லப்பட்டது உறுதி ஆனால், சவுதி கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்நிலையில். ஜமால் கசோகி ஒவ்வொரு விரல்களாக துண்டிக்கப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக துருக்கியின் ‘யேனி சபாக்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 15 பேர் கொண்ட சவுதி குழுவினர் அவரை சித்ரவதை செய்து கொன்றுள்ளார்கள். இதற்கான ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.
ஜமால் சித்திரவதை செய்யப்பட்ட போது துருக்கியின் சவுதி தூதர் முகமது அல் ஓட்டாய்பி “இந்த சித்ரவதையை வெளியில் வைத்து செய்யுங்கள். நீங்கள் என்னை பிரச்சனையில் சிக்க வைக்கின்றீர்கள்”என்று எச்சரிக்கை விடுக்கின்றார். அதற்கு சித்திரவதை செய்யும் நபர் “நீ சவுதிக்கு வந்து உயிருடன் வாழ வேண்டும் என்று கருதினால் வாயை மூடிக் கொண்டு சும்மா இரு” என்று தூதரை மிரட்டுவதாக அந்த ஆடியோவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜமால் கசோகியை சவுதி அரசே கொலை செய்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில், விசாரணையின் போது அவர் இறந்து விட்டதாக சவுதி அமெரிக்காவிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் சவுதி மீது நடவடிக்கை இருக்கலாம் என்று தெரிகிறது.

#ஊடகசுதந்திரம் #பத்திரிகையாளர்_கொலை #ஜமால்_கசோகி #சவுதிஅரேபியா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*