பன்னீர்செல்வத்தை மேலும் டம்மியாக்கிய எடப்பாடி பழனிசாமி!

அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு!

கன மழைக்கு வாய்ப்பில்லை – ’தமிழ்நாடு வெதர் மேன்’

என்ன ஆனது கேரளப் பெண்களுக்கு?

பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தார் என்று டி.டி.வி தினகரன் கூறிய குற்றச்சாட்டை ஊடகங்களிடம் ஒத்துக்கொண்ட பன்னீர்செல்வம் தனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்கும் நோக்கோடு பன்னீர்செல்வம் தன்னை வந்து சந்தித்தார் என்று தினகரனும் அவரது ஆதரவாளர்களும் கூறி வந்த நிலையில், சென்னையில், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் பொது:-
“ நேற்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான கழகக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் மொத்த நிர்வாகிகளும், கீழ் மட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். தினகரனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் எந்த சேதாரத்தையும் உருவாக்க முடியாததால் மனக்குழப்பத்தில் உள்ள தினகரன் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். திருப்பரங்குன்றம் தொண்டர்கள் எழுச்சியைக் கண்டு பொறாமையில் உளறுகிறார். டி.டி.வி தினகரன் கேட்டுக் கொண்டதால் 2017 ஜூலை 12-ஆம் தேதி பொதுவான நண்பர் ஒருவர் வீட்டில் சந்தித்தோம்.தினகரன் மனம் திருந்தி வந்திருப்பார் என நினைத்தேன். எனக்கு எதிராக தினகரன் செய்த சதிதான் இது. வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என்று அந்த நண்பர் என்னிடம் தெரிவித்தார். சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் வந்து என்னிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பிலும் அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். நான் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நான் எப்போதும் நினைத்ததிலை. முதல்வராக வேண்டும் என்றும் நான் எண்ணியதில்லை.”என்றார்.
தினகரன் பன்னீர்செல்வம் சந்திப்பு தொடர்பான குற்றச்சாட்டை தினகரன் தரப்பு கூறிய போது அதிமுக அமைச்சர்கள் அனைவருமே தினகரன் குழப்பம் உண்டு பண்ண நினைக்கிறார் என்றே கூறினார்கள். அவர்களால் இச்சந்திப்பு உண்மையா பொய்யா என்பதை அறிய முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியும் இச்சந்திப்பு தொடர்பாக அப்செட் ஆன நிலையில், இனி பன்னீர்செல்வம் பழைய தோரணையில் எடப்பாடி பழனிசாமி குழுவினருடன் வலம் வர முடியாத அளவுக்கு அவரது நம்பிக்கை சிதைந்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தி பன்னீர்செல்வத்தை டம்மியாக்கி விட்டது.

‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்? -சுபகுணராஜன்

கனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

 

#தினகரன்_பன்னீர்செல்வம் #ஒபிஎஸ்_இபிஎஸ் #அதிமுக_ஆட்சியைக்_கவிழ்க்க_முயற்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*