பயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு!

#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு வாங்கிய ‘பெல் 412’ ரக ஹெலிகாப்டரை தமிழக அரசு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இரண்டு என் ஜின்களைக்கொண்ட இந்த விமானத்தில் 11 பேர் வரை பயணம் செய்யலாம். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது பயணங்களுக்கு பயன்பட்ட இந்த விமானம் அவரது மரணத்தின் பின்னர் அரிதினும் அரிதாகவே பயன்பட்டது.

அடிக்கடி பழுதடைந்த அந்த விமானத்தில் உயிர்பயம் காரணமாக முதல்வரோ, கவர்னரோ பயணிப்பதில்லை. இதனால், அதை பாதுகாக்கும் செலவினங்கள் அதிகரித்தன. இதனால் அதை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் மாநில அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்தது.

1995-ஆம் ஆண்டு ஜெயலலிதா செஸ்னா என்ற விமானத்தை வாங்கினார். அந்த விமானத்தை வாங்கிய போதே திமுக தலைவரான மறைந்த கருணாநிதி விமானம் வாங்கியதை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த செஸ்னா விமானத்தை கருணாநிதி பயன்படுத்தவும் இல்லை. அவர் கார், ரயில் அவசரம் என்றால் வாடகை விமானம் என்று சிக்கனமாக செலவு செய்தார். மாதத்திற்கு ஆறு மணி நேரம் மட்டுமே பறந்த செஸ்னா விமானம் பல கோடிகளை ஏப்பம் விட்டு ஓய்ந்தது. அதே கதைதான் பெல் மாடல் ஹெலிகாப்டருக்கும்.

உண்மையில் ஜெயலலிதா பறந்த விமானத்தை எடப்பாடி பழனிசாமியாவது பயன்படுத்திருக்கலாம். ஆனால் உயிர்பயத்தில் விமானம் எங்காவது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த ஹெலிகாப்டரில் அவர் ஏறுவதில்லை. மொத்தமாக ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அந்த விமானம் ஓடியது ஒரு சில மணி நேரங்கள்தான்.
சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த விமானத்திற்கு தண்டச் செலவு செய்து விட்டு இப்போது விற்பனை செய்கிறார்கள்.

வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி!!

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

#Jayalalithaa #TNGovt #Helicopter

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*