பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்க இருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாகவும், தமிழகத் திட்டங்கள் தொடர்பாக பேச இருப்பதாக அரசுத் தரப்பு தகவல்களைக் கசிய விட்டாலும். இச்சந்திப்பின் நோக்கம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைப்பதற்கான இறுதிக்கட்டளைகளை பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமிக்கு இட இருக்கிறார் என்கிறது டெல்லி வட்டார தகவல்கள்.

சசிகலாவின் தயவில் முதல்வராகி அதை அப்படியே கொண்டு போய் பாஜகவின் காலடியில் சமர்பித்து விட்ட எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி அரசை பாதுகாத்து வருகிறது பாஜக. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் எப்படியாவது கைப்பற்றுவது ஒன்றுதான் பாஜகவின் இப்போதைய உடனடி நோக்கம். அதுவரை இந்த அரசு நீடித்திருக்கும். 18எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குகளும் அதற்கு ஏற்ப தாமதமாகும்.

ஆனால், அதிமுக மதச்சார்பற்ற கட்சியாகவே தமிழகத்தில் அறியப்படுகிறது. அதிமுக ஆட்சி செய்தாலும் உண்மையில் ஆட்சி செய்வது பாஜகதான். அதனால்தான் பாஜகவை எதிர்ப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பழனிச்சாமி. திராவிட இயக்கங்களையும். நீதிமன்றத்தையும் கூட கூசும் சொற்களால் விமர்ச்சிக்கிறவர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியவில்லை. அதிமுக பாஜகவில் ஐக்கியமாகி பல மாதங்கள் ஆகி விட்டது. ஆனால், அதை இன்று வரை மறுத்தே வருகிறது. வெளிப்படையாக நாங்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டோம், பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவை ஆதரித்து வாக்களிக்க அதிமுக எம்.பிக்களுக்கு உத்தரவிட்டது பாஜகதான் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், கட்சிக்குள் உள்ள சிறுபான்மையினர் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்பதால் இலை மறை காயாக பாஜகவுடன் தேனிலவை அனுபவித்து வருகிறது அதிமுக.


எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற இத்தனை மாதங்களில் தமிழக நிர்வாகத்தை தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக இப்போது பழனிசாமிக்கு விதிக்க சில கட்டளைகளை வைத்திருக்கிறது. ஆனால், இனியும் இப்படியே விட முடியாது மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தேர்தல்கள் முடிந்த கையோடு தமிழகத்தில் நேரடியாக தன் தேர்தல் வேலையை பாஜக துவங்க இருக்கிறது. அதற்கான இறுதிக் கட்டளைகளை பிறப்பிக்கத்தான் மோடி டெல்லி அழைத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமியை.

#
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் பாஜக வெல்லும் சூழல் உள்ளதா?

#

இந்த இரு தொகுதிகளிலும் பாஜக கைகாட்டும் அதிமுக நபர்களுக்கே சீட் வழங்க வேண்டும்

#

தெலங்கானாவில் சந்திரசேகர ராவுடன் ரகசியக் கூட்டு வைத்து சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது போல தமிழகத்திலும் செய்யலாமா என்பதை சொல்ல வேண்டும். (பெயர் கெட்டு விடும் என்ற அச்சமாம்)

#

அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வர தெற்கிலிருந்து கணிசமான பங்களிப்பு வேண்டும். 35 தொகுதிகளாவது நாம் வெல்ல வேண்டும். அதற்குரிய திட்டங்கள் என்ன?

#

அதிமுகவுக்கு சவால் விடுகிறவர்கள் தொடர்பாக அஞ்ச வேண்டாம்.அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் தேர்தல் பணிகளை வெற்றிக்கனியாக மாற்ற பாடுபடுங்கள்
இவைகள்தான் பழனிசாமிக்கு மோடி இட இருக்கும் கட்டளைகள். இந்த கட்டளைகளை பழனிசாமி தட்டிக்கழிக்கவோ, விலகி நிற்கவோ முடியாது. அதற்கான எச்சரிக்கைதான்.
துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்ற கவர்னரின் எச்சரிக்கை.
முன்னர் வருமானவரித்துறையை வைத்து ரெய்ட் அடித்தே அடியபணிய வைத்தவர்களை இனி ஆளுநரை வைத்தே அதட்டி பணிய வைப்பார்கள். போதாக்குறைக்கு கிரிஜா வைத்தியநாதன் மழையை காரணம் காட்டி இரண்டு தொகுதி இடைத்தேர்தலையும் தள்ளி வைக்க கடிதம் எழுதியதற்குள் இப்படி ஒரு அரசியல் தேவை இருப்பதாகக் கூறுகிறார்கள்.
பாஜகவை பொருத்தவரை இந்தியாவின் இரண்டு மாநிலங்களை ரகசியமாகக் கையாள்கிறது. ஒன்று தெலங்கானா இன்னொன்று தமிழகம். எது எப்படி இருந்தாலும் பாஜகவின் கனவுகள் தமிழகத்தில் பலிப்பதில் பல சங்கடங்கள் இருக்கும்.

கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க உறுப்பினரா? -ஸ்டாலின் கேள்வி!

#சபரிமலை பெண்களுக்கு எதிராக பெண்கள் பேரணி!

 

#ops_eps #பன்னீர்செல்வம் #எடப்பாடி-பழனிசாமி #மோடி-பழனிசாமி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*