
அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு!
கன மழைக்கு வாய்ப்பில்லை – ’தமிழ்நாடு வெதர் மேன்’
தமிழக துணைமுதல்வரும் அதிமுக தலைவர்களில் ஒருவருமான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையின் நம்பகத்தன்மைக்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளான நிலையில் அதிமுகவுக்குள் சிதைக்கப்பட்டிருக்கும் நம்பகத்தன்மை மேலும் மேலும் வலுப்பெறும் சூழலும் உருவாகி இருக்கிறது.
அதிமுகவின் தற்போதைய நிலையை ஜெயலலிதா மரணத்திற்கு முன் பின் என இரண்டாகப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல்களை எய்ம்ஸ் மருத்துவர்களை வைத்து தெரிந்து கொண்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு பன்னீர்செல்வத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் ஜெயலலிதா மரணத்தின் முன்னரே கொண்டு வந்து விட்டது. ஜெயலலிதா மரணத்தை அறிவிப்பதற்கு முன்பே பன்னீர்செல்வத்தையும் அதிமுக எம்.எல்.ஏக்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்கள். அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்தார். பன்னீர்செல்வம் முதல்வரானதை சசிகலா விரும்பாத நிலையில், அவர் பொதுச்செயலாளராகி முதல்வராக தயாரான போது தர்மயுத்தத்தை துவங்கினார் பன்னீர்செல்வம்.
பின்னர் பிளவுகள், சசிகலா சிறை சென்ற நிகழ்வு. அடுத்தடுத்து அடித்த ரெய்டுகள் மூலம் எடப்பாடி பழனிசாமியையும் அதிமுகவையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததுமாக பாஜக நினைத்த அத்தனை காரியங்களையுமே கச்சிதமாக நிறைவேற்றியது.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் எடப்பாடி முதல்வராகும் வரை பன்னீர்செல்வம் பாஜகவுக்கு பயன்பட்டாரே தவிற பன்னீர்செல்வம் நினைத்தது எதனையும் பாஜக செய்து கொடுக்கவில்லை. என்பதோடு பன்னீர்செல்வம் பாஜகவை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். ஆனால், பாஜக பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி அவரது அரசியல் வாழ்க்கையையே காயடித்து விட்டது. சசிகலாவையும் பகைத்து எடப்பாடி பழனிசாமியையும் பகைத்து தனிமைப்பட்ட பன்னீர்செல்வத்தை மீண்டும் ஐக்கியமாக்கியது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி .அதே குருமூர்த்தி வீட்டில் வைத்துதான் தினகரன் -ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பும் நடந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவை ஒன்றாக்கி ஒட்டு மொத்த அதிமுகவையும் தங்கள் கைக்குள் கொண்டுவரும் முயற்ச்சியின் ஒரு பகுதியாகவே இச்சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், எதற்கும் வளைந்து கொடுக்காத தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு தனித்து நின்று ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று காட்டிய பின்னர் பாஜகவின் அணுகுமுறை மாறத்துவங்குகிறது.
மொத்தத்தில் கட்சிக்குள் இருக்கும் தனது சொந்த பலத்தை நம்பாமல் மத்தியில் ஆளும் கட்சியின் பலத்தை நம்பிப் போய் அரசியலில் தனிமைப்பட்டு நிற்கும் சூழலுக்கு வந்திருக்கிறார் பன்னீர்செல்வம்.
பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!
This is true