பாஜக தலைவர்கள் தமிழகத்தின் வரப்பிரசாதம் -பெருமித பொன்னார்!

கதை திருட்டும் ஒரு மலையாள சினிமாவும் -மருதம்!

பட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி!

இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO!

தேவர் ஜெயந்தி -ஓபிஎஸ்-இபிஎஸ் பிளெக்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தகர்ப்பு! VIDEO

தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதி உள்ளவர்களாக வளர்ந்து வருகிறார்கள். இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது” என்று குடியாத்தத்தில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

தமிழக பாஜக தலைவர்கள் என்ற உடனே பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜாதான் நினைவுக்கு வருவார். வாயை திறந்தாலே சாக்கடை ஓடும் அளவுக்கு வன்முறை விதைக்கும் அளவுக்கு பேசி வருகிறார். அது போல பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், ராகவன் , உள்ளிட்டோரும் வதந்திகளை பரப்புவதிலும், வார்த்தைகளைக் கொட்டுவதிலும் முன்னணி வகிக்கும் நிலையில், குடியாத்தத்தில் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்னார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“ தமிழக பாஜக தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதி பெற்றவர்களாக வளர்ச்சியடைந்து உயர்ந்துவருகிறார்கள். இது தமிழகத்திற்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேம்படுத்துகிற நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருகிறேன். இதுவரை 21 இடங்களுக்குச் சென்று இந்த செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறேன்.டெங்கு மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறவில்லை. மேலும் அதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். பாஜக தலைமையில் கூட்டணியா அல்லது மற்ற கட்சிகள் தலைமையில் கூட்டணியா என்பதை பின்னர் முடிவு செய்வோம்.தமிழகத்தில் யாராக இருந்தாலும் எங்கள் பெயரைச் சொல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. தமிழக அரசின் செயல்பாடுகள் முன்பை விட முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் போதுதான் தமிழகம் வளர்ச்சியின் உச்சத்தை அடையும்” என்றார்.
#அதிமுக_பாஜக_கூட்டணி #PonRadhakrishnan #BJP #AIADMK #ADMK

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*