பாடகி சின்மயிக்கு சில கேள்விகள்!

ஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு!

வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி!!

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

ஆண்டாளை இழிவு படுத்தியதாகக் கூறி ஆண்டாள் சன்னதியில் வைத்து மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெரும் பிரச்சினையை எதிர்கொண்ட வைரமுத்து பாலியல் ரீதியான குற்றச்சாட்டால் மீண்டும் குறி வைக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
#metoo என்ற கேஷ்டேக்கில் பெண்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பதிவுகளாக வெளியிட்டு வருகிறார். இப்போது இதே கேஷ்டேகில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பாடகி சின்மயி. இப்போது திரையுலகின் உச்சத்தில் இல்லாமல் மேடைகளில் பாடி வருகிறார்.இனிமையாக குரலில் பாடும் சின்மயிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. 18 ஆண்டுகளுக்கு முன்பு 2004-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு கலை நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்ற போது கவிஞர் வைரமுத்துவும் இதே நிகழ்ச்சிக்காக ஸ்விஸ் செல்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக சுவிஸ் நாட்டில் தங்கியிருந்த போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வந்து சின்மயிடம் வைரமுத்துவிடம் அடஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என நிர்பந்தித்தாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டை வைரமுத்துவை ஆண்டாள் விவகாரத்தில் பழி வாங்க முடியாதவர்களும், அவர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களும் பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் அளித்துள்ள பதிலில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் தற்போது நாடெங்கும் நாகரீமாகி வருகிறது. நான் தொடர்சியாக அவமானப்படுத்தப்படுவதாகவும் அவற்றுள் இதுவும் ஒன்று என்றும் கூறியுள்ளார்.

சில தொலைக்காட்சி ஊடகங்களும் இதை எடுத்துக் கொண்டு விவாதப்பொருளாக்கி வரும் நிலையில் சின்மயி தொடர்பாக சில கேள்விகள் நமக்கு எழுகின்றன.

சின்மயி திருமணத்தில் வைரமுத்து
சின்மயி திருமணத்தில் வைரமுத்து

#
18 ஆண்டுகள் கழித்து வைரமுத்து மீது இந்த பாலியல் புகாரை கூற வேண்டிய அவசியம் என்ன?

#
வைரமுத்து நேரடியாக சின்மயிக்கு பாலியல் நிர்பந்தம் கொடுக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் பாலியல் சீண்டல் கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறும் நிலையில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கருத்து என்ன?

#
2004- ஆம் ஆண்டு வைரமுத்து பாலியல் ரீதியாக சீண்டிய நிலையில் 2014-ஆம் ஆண்டு தன் திருமணத்திற்கு அழைத்து அவரது காலில் விழுந்து வாழ்த்து பெற்றது ஏன்?

#
சின்மயின் முதல் பாடலான ‘ ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் வைரமுத்து எழுதியதுதான். அந்த பாடலுக்காக தேசிய விருதும் வென்றுள்ள நிலையில், தமிழக அரசியல் சூழலையும் இத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். வைரமுத்து மீது பாஜக ஆதரவாளர்கள். இந்து அடிப்படைவாதிகள் கடும் கோபத்தில் உள்ள நிலையில், இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கில்தான் சின்மயின் புகார் உள்ளதா?

#
வைரமுத்து மீது இன்று பாலியல் புகார் கூறும் சின்மயி அவரது பல ட்விட்களை சமீப காலம் வரை பகிர்ந்துள்ளார்.சின்மயி வைரமுத்து மீது கூறியுள்ள புகாரில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. ஆண்டாள் பிரச்சனை துவங்கி வைரமுத்துவை குறிவைக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் விருப்பங்களுக்கு சின்மயி துணை போயிருக்கலாம் என்று பரவலாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.

#chinmayi  #Chinmayi_Sripaada #சின்மயி #கவிஞர்வைரமுத்து

#MeToo

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*