பிரபாகரன் தாயாரை கவனித்துக் கொண்ட மருத்துவர் மரணம்!

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

#சபரிமலை பெண்களுக்கு எதிராக பெண்கள் பேரணி!

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க உறுப்பினரா? -ஸ்டாலின் கேள்வி!

திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்?

உடல் நலம் குன்றிய நிலையில் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை கவனித்துக் கொண்ட வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் ஈழப் போரின் பின்னர் மலேஷியா கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டார். ஆனால், அப்போதைய மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அவரை திருப்பி அனுப்பியது. இலங்கை கொண்டு செல்லப்பட்ட அவரை அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனையில் வைத்து கவனித்துக் கொண்டார் மருத்துவர் மயிலேறும் பெருமாள்.

பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்த மயிலேறும் பெருமாள். 1965-ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று. 1972-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக பணி செய்தவர். மிகத் திறமையான மருத்துவர் என்று பெயர் வாங்கிய மயிலேறும் பெருமாளை பல்வேறு போராளிக்குழுக்களும் கடத்திச் சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வைத்து மீண்டும் கொண்டு வந்து விடுவார்கள். ஒவ்வொரு முறை கடத்திச் செல்லப்பட்டு திரும்பி வந்த பின்னரும் இலங்கை ராணுவம் இவரை விசாரித்துச் செல்வார்கள்.


இதனால், 86-ஆம் ஆண்டு மயிலேறும் பெருமாள் சவுதி அரேபியாவுக்குச் சென்று விட்டார். பின்னர் 92-ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் மருத்துவராக பணியாற்ற இலங்கை திரும்பியவரை மீண்டும். கிளிநொச்சி அரசு மருத்துவ தலைமை மருத்துவர் ஆக்கினார்கள். பின்னர் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வந்தார். போர்ச்சூழலிலும், அதன் பின்னரும் காயமடைந்த மக்களுக்கு இரவு பகல் பாராது உழைத்த மயிலேறும் பெருமாளிடம் பிரபாகரனின் தயார் பார்வதியம்மாள் வந்து சேர்ந்தார்.
பார்வதியம்மாளுக்கு மூன்று வேளை உணவுகளையும் தன் வீட்டில் இருந்து வரவழைத்து கொடுத்து வந்த மருத்துவர் அவரது முதுமையை புரிந்து கொண்டு சிகிச்சையளித்து இறுதி வரை கவனித்துக் கொண்டார்.பின்னர் 2011 -பிப்ரவரி 20-ஆம் தேதி பார்வதியம்மாள் மரணமடைந்தார். பார்வதியம்மாளை கவனித்துக் கொண்ட டாக்டர் மயிலேறும் பெருமாள் இன்று காலமானார் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

#பார்வதியம்மாள்_மரணம் #மருத்துவர்-மயிலேறும்_பெருமாள் #ஈழம் #பிரபாகரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*