பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!

‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்? -சுபகுணராஜன்

கனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் தீர்ப்பை அமல் படுத்த முடியுமா அதனுடைய பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அய்யன்கோவிலுக்கு உரிமை கொண்டாடும் பந்தள மகாராஜாவின் வாரிசுகள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகளை நடை திறக்கும் போது தேவசம் போர்ட்டிடம் ஒப்படைக்க வேண்டும், பின்னர் நடை சாத்திய பின்னர் நகைகளை திரும்ப பெற்றுக் கொள்வார்கள். அய்யப்பன் கோவில் அரசுக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோவில் மீதான தங்களின் தனி உரிமை என பந்தள மகாராஜாவின் வாரிசுகள் ஆண்டுதோறும் இந்த உரிமையை அனுபவித்து வரும் நிலையில், பந்தள மாகராஜா குடும்பத்தினர் பெயரில் ஒரு அறிவிப்பு மூகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியது. அய்யன்கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் நாங்கள் அய்யப்பன் கோவில் படியை மிதிக்க மாட்டோம் நகைகளையும் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தார்கள். ஆனால், இந்த அறிவிப்பு உண்மையா பொய்யா என்பதை சோதிக்க முடியவில்லை. பந்தள மகாராஜா குடும்பத்தினரை ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற இந்து அமைப்புகள் தொடர்பு கொண்டு போராட்டங்களை முடுக்கி விட்டனர்.

பந்தளம் குடும்பத்தினர் தலைமையில் பெண்களே பெண்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.இந்த போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் கவனிக்கப்பட்ட அதே நேரம் கேரளாவில் உள்ள பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட எவருமே அய்யப்பன் கோவில் வழிபாட்டு உரிமை தொடர்பாக எதுவும் பேசவில்லை. ஆதரித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசோ இது குறித்து மவுனம் காக்கிறது. கேரள அரசை பிற்போக்கு சக்திகளின் உதவியுடன் வீழ்த்த அய்யப்பன் கோவில் வழிபாட்டை ஆகம விதி, பொது நம்பிக்கையின் பெயரால் தெருவுக்கு இழுத்து விட்டது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியே அய்யப்பன் கோவில் விவகாரத்தில் பாஜகவின் கருத்தை ஆதரிக்கிறது. பக்தர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என்னும் பெயரில் பெண்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது.பந்தளம் அரச குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா:-
“வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் பந்தளத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்துக்களின் நம்பிக்கைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம்.சபரிமலை கோவிலின் முக்கியத்துவத்தை சிதைக்கவே மாநில இடதுசாரி அரசு செயல்படுகிறது” என்று குற்றம் சுமத்தினார்.

என குற்றம் சாட்டினார். இதற்கிடையே காங்கிரஸ் இளைஞர் அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.நூறாண்டுகளாக கடைபிடிக்கப்படும் பாரம்பரியம் எனச் சொல்லி ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதி மறுக்கிறார்கள். இதில் மதவாதிகளுடன் காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து அரசியல் செய்கிறது.

#sabarimala #சபரிமலை-பெண்_வழிபாடு #பந்தள_மகாராஜா #சாமியே_சரணம்

“காங்கிரசும் எங்களை அழிக்கப்பார்க்கிறது” -மாயாவதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*