பேச்சிப்பாறை அணை கட்டிய வெள்ளையருக்கு மக்கள் அஞ்சலி!

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது!

குஜராத்தில் இருந்து வெளியேறும் வட மாநிலத்தவர்கள்!

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

கன்னியாகுமரிமாவட்டம் இன்று செழிப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் பேச்சிப்பாறை அணைக்கட்டுதான். இந்த அணைக்கட்டு மட்டும் இல்லை என்றால் குமரியில் பசுமையைபார்த்திருக்கவே முடியாது.இந்த அணைக்கட்டை கட்டியதில் பெரும்பங்காற்றியவர் வெள்ளைக்கார இஞ்சினியர் மிஞ்சின் ஆவார்.
1868 ஆம் ஆண்டு ஐரோப்பியநாடான அயர்லாந்தில் அக்டோபர் 8 ஆம் தேதி பிறந்தார் மிஞ்சின். இவரது தந்தை ஜான் வில்லியம் மிஞ்சின் தாய் ஜூலியா கேத்தரின். இவர்களின் பூர்வீகம் இங்கிலாந்திலுள்ள அயர்லாந்து ஆகும். ஜான் வில்லியம் மிஞ்சின் இந்தியாவில் ஊட்டியில் குளோவல்லி பகுதியில் குடியிருந்து காபி விவசாயம் செய்து வந்தார். அலெக்சாண்டர் மிஞ்சினின் உடன் பிறந்தவர்கள் 7 பேர். இவரது மனைவி ஆக்னஸ் பட்டிசன். இவர்களின் திருமணம் 1906 ஆம் ஆண்டு ஜூன் 28 இல் நடந்துள்ளது. ஹம்ப்ரி அலெக்சாண்டர் மின்சின் , 1895 இல் மதுரை நகரில் சுகாதாரப் பொறியாளராய் வேலை செய்த திறமையான இளம் வெள்ளைக் காரர். நாடு விடுதலையடைவதற்கு முன்பு இன்றைய குமரி மாவட்டம் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. . திருவிதாங்கூர் மகாராஜா மூலம் திருநாள் ஆட்சியின்போது அப்போது அவர் வசம் இருந்த நாஞ்சில் நாட்டுக்கு குடிக்கவும் பயிரிடவும் தண்ணீர் போதததால், மேற்கு தொடர்ச்சி மலையின் கோதையாறு, கல்லாறு சிற்றார் மற்றும் குட்டி ஆறுகளின் நீரை அணைகட்டி உபயோகம் செய்ய முடிவெடுத்தார். ஆங்கிலேயரிடம் உதவி கேட்டபோது மிஞ்சின் துரையின் வசம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அணைகட்ட தேர்ந்தெடுத்த இடம் பேச்சிப் பாறை. அடர்ந்த காட்டுப் பகுதி. காணிகள் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்த இடம் .அவர்கள் தெய்வம் பேச்சி அம்மனுக்கு கோயில் அமைத்து குடியிருந்த மலை தான் பேச்சிப் பாறை.
இடத்தை கொடுக்க மறுத்தார்கள் பழங்குடிமக்கள். ”காடுதானே எங்கள் தெய்வம். நாங்கள் இங்கே யிருந்து எங்கே செல்வோம்?” கதறினார்கள். திருவிதாங்கூர் அரசரின்நெருக்குதல், ஆங்கில சிப்பாய்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அவர்களின் எதிர்ப்பு அடக்கப் பட்டது. மிஞ்சின்துரை மலைவாழ்மக்களிடம் நேரடியாகப்பேசி பால் பொடி, ரொட்டி, கோதுமை மற்றும் மருந்துகள் உடைகள் கொடுத்து, அவர்களின் ஆதரவைப் பெற்றார். அது அவருக்கு வேண்டியதாய் இருந்தது. அணைகட்ட வேலை ஆட்கள், அணை கட்டும் இடத்தில் குடியிருப்புகள் அமைத்து அதில் புலம் பெயர்ந்தோரை அமர்த்தி, தானும் அங்கே கேம்ப் அடித்து 1897 இல் வேலையை தொடங்கினார். கடினமான உழைப்பும், கொசுக்கடியால் வந்த நோய்களும் வேலைசெய்வோரை பாதித்தது. ஆட்கள் குறைந்தனர். மலை வாழ் மக்கள் போதவில்லை. பக்கத்தில் ஆட்கள் நிறைந்த பகுதி பணகுடி. ஆனால் அது சென்னை மாகாணத்துக்குட்ப்பட்ட நெல்லை கலெக்டர் வசம் உள்ள பண்டிநாடு.பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப் பட்டது; தாமாக உடன்படும் பண்டிக்காரர்களை அழைத்து செல்லலாம்; எல்லா வசதிகளும் மூலம் திருநாள் செய்து தரவேண்டும். வறுமையில் இருந்த வள்ளியூர்காரர்களும், கடுக்கரை மலை தாண்டிப்போய் வேலையில் சேர்ந்தார்கள். பேச்சிப்பாறை, முடவன் பொற்றை, மோதிரமலை, குலசேகரம்,வேர்க்கிளம்பி, சித்திரங்கோடு, அழகியபாண்டியபுரம், பெருஞ்சாணி, பொன்மனை என அனைத்துபகுதிமக்களும் இங்கே சென்று அணை கட்டும் வேலையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.கடுமையான சூழ்நிலையிலும் மிஞ்சின் துரையின் அன்பும் ஆதரவும் அவர்களை கட்டிப் போட்டது. அணையும் 1906 இல் கட்டி முடிக்கப் பட்டது. சுண்ணாம்பு, செங்கல், ஜல்லி,கற்காரையால் இந்த அணை கட்டப்பட்டது.
அணைகட்ட உதவிய மக்களுக்கு கைமாறாக அணைக்கட்டின் ஒரு பகுதியில் பேச்சி அம்மன் கோயில் கட்ட உதவினார் துரை. மின்சின் என்பதை இவர்கள் இதமாக ”மூக்கன் துரை” என்று அழைத்து வந்தனர். தான் கட்டிய அணையை பிரிய மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டார் மூக்கன் துரை.
பொறியியல் பட்டதாரியான அலெக்சாண்டர் மிஞ்சின், முதலில் மதுரை நகராட்சி பொறியாளராகத்தான் பணி செய்துள்ளார். பின்னர் இவர் பேச்சிப்பாறை அணை கட்டும் பணியில் செயற்பொறியாளராக சேர்க்கப்பட்டார். இதில் அணை கட்டும் பணிகளுடன் அதன் பாசனக் கால்வாய்களை வெட்டும் பணிகளையும் பொறுப்பேற்று செய்துள்ளார். மாவட்டம் முழுவதும் வளைந்து வளைந்து செல்லும் கால்வாய்கள் நம்மை இன்றும் மனதை வருடும். மிஞ்சினுக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒரு பங்களா ஒதுக்கப்பட்டது.பேச்சிப்பாறை அணைக்கான களப்பணி அலுவலகம், குலசேகரத்தில், தற்போது அரசு மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து அவர் தனது குதிரை வண்டியில் பேச்சிப்பாறைக்கு சென்று வந்தார். 1906 ஆம் ஆண்டு அணை கட்டும் பணிகள் நிறைவடைந்தன. அடர்ந்த காட்டுப் பகுதியில் பல்வேறு இன்னல்களுக்கும், இடர் பாடுகளுக்கும் மத்தியில் அணைகட்டும் பணிகளை சிறப்பாக செய்த மிஞ்சின், மன்னர் ஸ்ரீமூலம் திருநாளின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடல் நலம் குன்றிய அவர் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி அவர் தனது 45 ஆவது வயதில் மறைந்தார். மன்னரின் ஆணைப்படி அலங்கரி க்கப்பட்ட வாகனத்தில் நாகர்கோவிலில் இருந்து பேச்சிப்பாறை அணைக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அணையின் அருகில் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அணையின் அருகில் அலெக்சாண்டர் மிஞ்சினின் உடல் அடக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணைகட்டில் இன்று மிஞ்சின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதிகாரிகள், அரசியைல் பிரமுகர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு அவரது நினைவிடதிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தகவல் -திருவட்டார் சிந்துகுமார்

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*