#RafaleScam போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் விமான ஊழல் – சிவசேனா விமர்சனம்!

WASHINGTON, DC - JUNE 7: (AFP-OUT) Prime Minister Narendra Modi of India meets with President Barack Obama in the Oval Office at the White House on June 7, 2016 in Washington, DC. Modi will address a joint meeting of Congress on Wednesday. (Photo by Dennis Brack-Pool/Getty Images)

சர்வாதிகார சபாநாயகர் தனபால்:கருணாஸை தகுதி நீக்கம் செய்ய முடிவு!

ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு ஆளும் அதிமுக ஆதரவு!

பாஜகவின் கூட்டாளியாக இருந்த சிவசேனா சமீபகாலமாக பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட ரபேல் போர் விமான  கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தி வரும் நிலையில். சிவசேனாவின் அதிகார பூர்வ இதழான சாம்னா போர்பர்ஸ் ஊழலை மிஞ்சி விட்டது ரபேல் போர் விமான ஊழல் என விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இதழில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள விரிவான கட்டுரையில்:-

போர்பஸ் ஊழலை எல்லாம் மிஞ்சி விட்டது ரபேல் ஊழல். அந்த  ஊழல் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அன்றாடம் பேசி வருகிறார். இதனால் அவர் பிரபலமடைந்து வருகிறார்.ராகுல்காந்தியின் கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் பேசியதால் அவரையும் தேசத்துரோகி என பாஜகவினர் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது விமானம் ஒன்றுக்கு ரூபாய் 527 கோடி ரூபாய் என ஒப்பந்தம் முடிவானது. ஆனால், பாஜக அரசில் ரூபாய் 1,570 என ஒப்பந்தம் செய்தார்கள்.அப்படி என்றால் இடைத்தரகருக்கு 1000 கோடியா? ரபேல் விமான ஊழலில் பாஜகவை அன்றாடம் ராகுல் விமர்சிக்கிறார். அதனால் அவரை பாகிஸ்தான் இயக்குகிறது என்கிறது பாஜக.இது நகைப்புக்கிடமாக இல்லையா?

1980-ல் போர்பஸ் ஊழல் நடந்த போது அதன் பின்னால்  குற்றம் சுமத்தியவர்கள் மீது பாகிஸ்தான் உள்ளதாக குற்றச்சாட்டு எழவில்லை. போர்பஸ் ஊழல் என்றவர்கள் தானே இப்போது ஆட்சியில் உள்ளார்கள். அவர்கள் மீது தானே ரபேல் விமான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.அவர்கள் ரபேல் ஒப்பந்தத்தை ஊழல் என்று நம்பத் தயாராக இல்லை. ரபேல் ஊழல் தொடர்பாக மற்ற கட்சிகள் மவுனம் காக்கும் நிலையில் ராகுல் காந்தி மட்டும் அதை பேசி வருகிறார். அதனால் அவர் மக்களிடையே பிரபலம் அடைகிறார். இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப அயோத்தி விவகாரம், இந்துமுஸ்லீம் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.ரபேல் ஊழலில் ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்களைச் சொல்கிறார்கள். பாதுகாப்பு விவகாரங்களில் எதையும் மறைக்க முடியாது. அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்து விட்டது என்று நீண்டு செல்கிறது அக்கட்டுரை.

#ரபேல்_ஊழல் #போர்பஸ்_விமான_ஊழல் #காங்கிரஸ் #சிவசேனா #பாஜக #nirmalasitharaman #RafaleScamGrandExpose #RafaleScam #ரஃபேல்-ஊழல்,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*