மக்கள் மருத்துவர் ஜெகன்மோகனுக்கு ஸ்டாலின் அஞ்சலி!

பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!

‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்? -சுபகுணராஜன்

கனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

நெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் பிறந்து சென்னை மந்தைவெளியில் மக்களின் மருத்துவராக திகழ்ந்த டாக்டர் ஜெகன்மோகன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைகளின் இதயத்தில் குடியிருந்த மனிதநேய மருத்துவரான திரு ஜெகன்மோகன் அவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் தனது மருத்துவ சேவையை துவங்கி, இன்றளவும் இருபது ரூபாய் கட்டணத்தைத் தாண்டாதவர் என்பது நினைத்துப் பார்க்க பெருமிதமாக மட்டுமல்ல எத்தகைய சேவை குணமிக்கவர் என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது.

பணமில்லாத ஏழை எளியவர்களுக்கும் பணமின்றி சிகிச்சை அளித்த பண்பாளர், மனிதநேயத்தின் மறு உருவம், மக்களின் இணை பிரியா மருத்துவர் இன்று நம்மிடம் இல்லை என்பது துயரமிகு செய்தி. பேரறிஞர் அண்ணாவிடம் அறிமுகம் பெற்று, தலைவர் கலைஞர் அவர்களுடன் நட்பாக இருந்த அவர், எமர்ஜென்சி காலத்தில் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல் தலைவருக்கு மருத்துவம் பார்த்தவர் என்பதை எண்ணிப்பார்க்கும் போது பெருமையடைகிறேன்.

இன்றும் நாள்தோறும் 300 பேருக்கு மேல் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரது மறைவு மாநிலத்தில் பெரும் பகுதி மக்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மருத்துவர் ஜெகன்மோகன் விட்டுச் சென்றுள்ள மாண்புமிக்க மருத்துவ சேவை இளைய தலைமுறை மருத்துவர்களுக்கு எல்லாம் ஈடில்லாத இமயமாக என்றைக்கும் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*