மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு!

சர்வாதிகார சபாநாயகர் தனபால்:கருணாஸை தகுதி நீக்கம் செய்ய முடிவு!

ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு ஆளும் அதிமுக ஆதரவு!

இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது நோபல் அறக்கட்டளை.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என பல துறைகளில் மனித குலத்திற்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான (2018) மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், என்ற மருத்துவருக்கும் ஜப்பான் மருத்துவர் தசுகோ ஹோன்ஜோவுக்குமாக இருவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியாளர்களான இவர்கள். புற்று நோயை குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இயற்பியலுக்காக பரிசும், அக்டோபர் 3-ஆம் தெதி வேதியியலுக்கான பரிசும், 5-ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் , 8-ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முயற்சி எடுப்பேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#NobelPrize #NobelPrizeForMedicine #நோபல்பரிசு #மருத்துவத்திற்கான_நோபல்_பரிசு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*