#மேற்குத்தொடர்சிமலை ஏலக்காய் விளைந்தது எப்படி? -ஓடியன்

ரணில் பதவிவிலகாமலேயே பிரதமரான ராஜபக்சே- இலங்கை அரசியலில் குழப்பம்!

இலங்கை அரசியல் திருப்பம் -பிரதமரானார் ராஜபக்சே!

மேல்முறையீடும் தினகரன் எதிர்காலமும்?

18ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட இயற்கையாக விளைகின்ற ஒரு பொருளாக இருந்துவந்தது ஏலக்காய் முதுவர்,உள்ளாடன், பளியர்,மலைவேடன், மன்னான் பிரிவுகளைச் சேர்ந்த ஆதிவாசிகள்தான் ஏலத்தை சேகரிப்பதில் அப்போதெல்லாம் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்.சீயக்காய், நெல்லிக்காய், குங்கிலியம், லவங்கம், கிராம்பு ஆகியவற்றோடு ஏலத்தையும் அவர்கள் ஒரு வனப்படு பொருளாகவே சேகரித்துவந்தார்கள்
ஏலக்காய்க்கான தேவை மலையளவு அதிகமாகிக்கொண்டேபோனது. இயற்கையாக சேகரிக்கும் ஏலக்காயால், சந்தையில் உருவான டிமாண்ட்டை ஈடுகட்டமுடியவில்லை,ஏற்கனவே தேக்கு, மரங்களுக்காகவும் பல்வேறு வளங்களுக்காகவும் வனங்களை ஆக்கிரமித்துக்கொண்ட வெள்ளையர்கள் தாவரவியல் ஆராய்சியாளர்கள் உதவியுடன் ஏலச்செடியை நாற்றங்கால்களில்உருவாக்கி நேரடியாக பயிரிட ஆரம்பித்தார்கள்.
கடல்மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் நிலவும் சீதோஷ்ணநிலையில் அதன்போக்கில் இயற்கையாக விளைந்துவந்த ஏலக்காயில் புதிதுபுதிதாக பல வெரைட்டிகளை உருவாக்கினார்கள். சில வெரைட்டிகள் 900 அடி உயரத்தில் கூட அபரிமிதமான விளைச்சலை அள்ளிக்கொடுத்ததுஇப்படியாக 18 ஆம் நூற்றாண்டில் டீ காபி மிளகுக்கு ஈடுகொடுத்து ஏலக்காய் ஒரு வெல்லமுடியாத தோட்டப்பயிராக விஸ்வரூபம் எடுத்தது.
ஏலம் பயிரிடும் முறையை வெள்ளையர்கள் இரண்டுவகைகளில் செய்திருக்கிறார்கள். ஒன்று தாங்களே நேரடியாக தோட்டங்களில் பயிரிட்டு மகசூலை எடுத்திருக்கிறார்கள் இன்னொன்று அங்கே காடெரிப்பு விவசாயம் செய்துவந்த பழங்குடிகளை நிர்பந்தித்து ஏலம் பயிரிட வைத்திருக்கிறார்கள்.
இயற்கைக்குமாறான ஒரு முறையை கைக்கொள்ளமுடியாத பழங்குடிகள், ஒரு கட்டுக்குள் நிற்கவோ சுதந்திரமற்ற நிலையில் செயல்படவோ விரும்பாத பழங்குடிகள், துரைமார்களின் கட்டளைகளை துச்சமாக நினைத்து அடர்வனங்களுக்குள் நகர்ந்துபோய் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.ஆரம்ப காட்சியில் மலையேறி வரும்போது ரங்குவும் தாமரையும் சாத்தனை வணங்கிவிட்டு மேடேரி வருவார்கள்.திருமணப்.பத்திரிக்கை வைக்க எஸ்டேட்டுக்கு வரும் ஒருவர் ‘இது என்ன’வென கல்குட்டைக்காட்டி ரங்குவிடம் கேட்பார்

’’புதுசா மலை ஏறிவர்ரவங்க…, உடம்புமுடியாம தலைவலி காச்சல்ன்னு வர்ரவங்க… உம் பாரத்த நான் சுமக்கறேன் எம்பாரத்த நீ சுமன்னு சொல்லீட்டு கொண்டுவந்த சின்ன கல்ல எடுத்து இங்க வீசீட்டு மெட்டுலபோய் போதப்புல்லுல ஒரு முடிச்சப்போட்டுட்டு போயிட்டே இருப்பாங்கன்னே” என்று ஒரு உரையாடல் இருக்கும் இது முக்கியமான காட்சியாக எனக்குப்படுகிறது.இப்படி கல்போடும் சடங்கு, இருளர் பழங்குடிகளிடம் இன்னும் இருக்கிறது. இதர சில பழங்குடிகளின் பொதுபண்புகளில் ஒன்றாகவும் அது இருக்கிறது பொதுவாக இந்த கல்போடும் சடங்கு இறந்தவர் உடலை புதைக்க கொண்டுபோகும் போது பழங்குடிகள் நிகழ்த்துகிறார்கள் அதுவும் இரண்டுமுறை நிகழ்த்துகிறார்கள்.
தலை திருப்பிவைத்து பிணத்தை எடுக்கும்போது இடுகாட்டில் ஒன்றும், புதைக்கும் இடத்தில் ஒன்றுமாக இரண்டுமுறை கல்போடும் சடங்கை நிகழ்த்துவார்கள். இதர சில பழங்குடிகளின் சுடுகாடுகளிலும் இந்த கல்குட்டை காணமுடியும் மூத்தவர்களின் ஆவி அந்தக்கல்லில் உறைந்திருப்பதாக நினைத்து அதை வணங்கும் தன்மையும் பல இடங்களில் இன்றளவும் காணமுடியும்.அதுபோல தாமரை கையில் எப்போதும் இருக்கும் கொக்கித்தடி பிரத்யோகமானது அது பழங்குடிகளின் கைத்தடிதான். கிழங்குகளை தோண்டவும் கால்நடைகளுக்கு செத்தைகளை களைந்துபோடவும் உபயோகப்படுத்தப்பட்டுவந்த ஒரு கருவியது. கொக்கித்தடி பழங்குடி மூப்பன் ஒருவனின் செங்கோல் என்று கூட வைத்துக்கொள்ளமுடியும் மேலும் அது செய்திகளை கடத்துகிற ஊடகமாகவும் பல சமயங்களில் இருந்திருக்கிறது.
இந்த வடிவமுள்ள கொக்கிதடியோடு யாராவது ஒருவர் கடந்துபோனால் அவர்களைபார்த்து எதிரே வருபவர்கள் கேட்கும் முதல கேள்வி ’ஆரு சத்தா’ (யாரு இறந்தது) என்பதாகத்தான் இருக்கும்.மலைகளுக்குள்ளிருக்கும் தோட்டவேலைகளுக்குபோவது ஒருவழிப்பாதை என்று சொல்வார்கள் அதில்போனவர்கள் திரும்பமுடியாது என்பதற்கான குறியீடாகவும் இதை என்னால் எடுத்துக்கொள்ளமுடிகிறது.
தாமரையை நான் ஏதாவது ஒரு மூப்பனாகவோ பட்டாகாரனாகவோ நிலங்களை காக்கும் காணிக்காரணாகவோதான் பார்க்கமுடிகிறது.அதிகாரங்களையும் நிலங்களையும் இழந்து குற்றம்பரம்பரை என்று குற்றம்சாட்டப்பட்ட மனிதர்களுக்கு கைந்தாங்கலாய் தன் சொந்த நிலத்தில் கூலியாக வேலைசெய்யும் புதை பளியனாகவோதான் தாளிமுதுவனாகவோதான்என்னால் தாமரையைப் பார்க்கமுடிந்தது.இப்படி படம் முழுக்க பழங்குடி தன்மையை நிறைய காணமுடிகிறது.
மேய்ச்சல் சமூகமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் மைசூரிலிருந்து மலையோரமாக வந்து சேர்ந்த காப்பிலியர்கள் வனங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோக வெள்ளையர்களை அண்டி வாழ்ந்திருக்கிறார்கள்.அத்துவானக்காடுகளுக்குள் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடிகளின் நிலங்களில் காப்பிலியர்களை விவசாயம் செய்துகொள்ளுமாறு பிரிட்டீஷ்காரர்கள் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படித்தான் இரண்டாம் முறையாக கீழிருந்து வந்த அன்னியர்கள் கைகளுக்குள் தங்கள் நிலங்களை பழங்குடிகள் இழந்திருக்கிறார்கள்.எஸ்டேட்டுகளின் விரிவாக்கமும் தோட்டப்பயிர்களும் பெருகிவளர்ந்தபின்னே அதில் வேலை செய்யும் ஆட்களுக்கான தட்டுப்பாடுகள் இயல்பாகவே எழுந்திருக்கிறது.அப்போது குற்றப்பரம்பரைசட்டம் அமுலில் இருந்த காலம். காலையும் மாலையும் குறிப்பிட்ட சாதியினரும் சில பழங்குடிகளும் காவல்நிலையங்களில் கையெழுத்துப்போடும் ஒரு முறை வழக்கில் இருந்தது. அப்படி கையெழுத்திட அடிக்கடி தவறுகிறவர்களை இங்கே அடிமையாக வைத்துக்கொள்ள பிரபுக்களுக்கு சுதந்திரம் இருந்திருக்கிறது. அந்த சட்டம் இந்தத் தோட்டங்களில் பணிபுரியும் கூலிகளை உருவாக்க ஏற்படுத்தப்பட்டதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை ( தொடரும் )
(மேற்குதொடர்சிமலை குறித்த உரையை தட்டச்சி பதிவிடுமாறு சங்கம்ம் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் பல்வேறு பணிச்சுமைகளும்,தொடர்சியான பயணங்களும் எழுதுவதை தள்ளிப்போட்டுகொண்டே இருக்கிறது.பகுதி பகுதியாகவேனும் எழுதிவிடுவது என்று முடிவெடுத்து வைத்திருந்த குறிப்புகளினுதவியுடன் ஒரு பகுதியை இங்கே வாய்ஸ்டைப்பிங்கில் பதிந்திருக்கிறேன் வழக்கம்போலவே நண்பர்கள் பிழைகளுக்கு பொறுத்தருளவேண்டும்)
#மேற்குத்தொடர்சிமலை

சிறுமி கொலை -என்ன நடந்தது? எவிடன்ஸ் கதிர்

விசில் அடித்தவர்களை கடவுள் நம்பிக்கையில்லா கம்யூனிஸ்டுகள் என்ற இளையரஜா!

தகவல் திருட்டு -பேஸ்புக்கிற்கு 5 கோடி அபராதம்!

யாரிடமும் தோற்காது -பினராயி விஜயன்!

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜெயக்குமார்!

#mahindarajapaksa #Srilankannews #Rajapakshe #Mahinda_Rajapaksa #Srilanka_Politics #Eelam #Tamil_Eelam

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*