மேல்முறையீடும் தினகரன் எதிர்காலமும்?

தகவல் திருட்டு -பேஸ்புக்கிற்கு 5 கோடி அபராதம்!

யாரிடமும் தோற்காது -பினராயி விஜயன்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தினகரன் அணிக்கு அதிர்ச்சியாகவே அமைந்தது. தினகரன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் தங்க. தமிழ்செல்வம் ரொம்பவே டென்ஷனாக ஊடகங்கள் முன்னால் சீறி விட்டார். அதன் பின்னர் , தினகரன் அழைப்பின் பேரில் குற்றாலத்தில் இருந்து நேற்றே மதுரைக்கு 18 பேரும் வந்து விட்டார்கள்.
இந்த 18 பேரும் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதற்கும் சசிகலா சிறை சென்றதற்கும் இடைப்பட்ட காலத்தில் தினகரனுக்குக் கிடைத்த சொத்துக்கள். அவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒபிஎஸ்-இபிஎஸ் வீசிய ஆசைவார்த்தைகளுக்கு மயங்கி அந்தப்பக்கம் சாயாமல் தினகரனுடனேயே இருந்தவர்கள்.
அவர்களை தக்கவைத்துக் கொள்ள தினகரன் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல என்னும் நிலையில்தான் 18 பேரின் பதவியும் பறிப்பொய் இருக்கிறது. இந்த 18 பேரையும் மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்தது ஜெயலலிதாவின் முகத்திற்காக அந்த முகமும் இப்போது இல்லாத நிலையில், மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் வேறு அனைவருக்குமே இருந்திருக்கிறது.
ஒரு வேளை தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் வந்தால் அத்தனை தொகுதிகளிலும் திமுகவே வெல்லும் என்பது தெரிந்திருந்த நிலையில், ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் என்றால் செலவு செய்ய முடியும் 20 தொகுதிகளுக்கும் செலவு செய்து வெற்றியும் பெறா விட்டால் அரசியல் வாழ்க்கையே சிக்கலாகி விடும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருந்திருக்கிறது.


உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம் இதே போல மூன்று நீதிபதிகள் ஆளுக்கொரு தீர்ப்பைச் சொல்லி பின்னர் வேறு அமர்வுக்கும் வழக்கு மாற்றப்படலாம் எது எப்படி என்றாலும் இது நமக்கு பின்னடைவுதான். இப்போதைக்கு தேர்தலைச் சந்திக்கும் திராணி நமக்கில்லை என்பதால் மேல் முறையீடுதான் நம் முன்னால் உள்ள ஒரே வாய்ப்பு என்றிருக்கிறார்கள்.
சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த தினகரனும் அதே முடிவுக்கு ஒப்புக் கொண்டார். இந்த ஆட்சி உடைந்தால் மட்டுமே அதிமுகவுக்குள் எதேனும் கை வைக்க முடியும். அதற்கான வாய்ப்பும் இப்போது போய் விட்ட நிலையில்,தேமுதிக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைத்தது போல தங்களுக்கும் கிடைக்கும் என தினகரன் குழுவினர் நம்புகிறார்கள்.
ஆனால், மேலேயிருந்து கீழே வரை மோடியின் நீதிமன்றத்தில் அந்த நீதிக்காக தினகரன் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கே தெரியாத உண்மை.

#தினகரன்_அணி #தகுதிநீக்க_வழக்கு #சசிகலா_அணி

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜெயக்குமார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*