ரணில் பதவிவிலகாமலேயே பிரதமரான ராஜபக்சே- இலங்கை அரசியலில் குழப்பம்!

இலங்கை அரசியல் திருப்பம் -பிரதமரானார் ராஜபக்சே!

மேல்முறையீடும் தினகரன் எதிர்காலமும்?

சிறுமி கொலை -என்ன நடந்தது? எவிடன்ஸ் கதிர்

விசில் அடித்தவர்களை கடவுள் நம்பிக்கையில்லா கம்யூனிஸ்டுகள் என்ற இளையரஜா!

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரசிங்க இருந்து வந்த நிலையில், ரகசியமான திட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு ராஜபக்சேவுக்கு தீடிரென பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் அதிபர் சிறிசேனா.
இது சர்வதேச அளவில் அதிர்ச்சிகரமாக பார்க்கப்படுகிறது. சிறிசேனாவும், ராஜபக்சேவும் சிறிலங்கா சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையில் எழுந்த கோஷ்டி மோதலால் சிறிசேனா கட்சிக்குள் செல்வாக்குப் பெற்று  ராஜபக்சேவை விட அதிக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அதிபர் ஆனார். ராஜபக்சே பிரதமர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராக்கினார் சிறிசேனா. ஆனால், இப்போது சிறிசேனாவுக்கும் ரணிலுக்கும் இடையில் எழுந்த மோதலால்  ராஜபக்சேவை திடீரென பிரதமராக்கி இருக்கிறார் சிறிசேனா.

இதுவரை பிரதமராக இருந்த ரணில் தன் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் கேட்ட போது “தான் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். ஆனால், பதவி வகித்த ஒருவர் ராஜிநாமா செய்யாத நிலையில் இன்னொருவரை பிரதமராக சிறிசேனா நியமித்திருப்பது அரசியல் சாசன சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர “ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது சட்டவிரோத நடவடிக்கை. இது நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுத்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

#Rajapakshe #Mahinda_Rajapaksa #Srilanka_Politics #Eelam #Tamil_Eelam

தகவல் திருட்டு -பேஸ்புக்கிற்கு 5 கோடி அபராதம்!

யாரிடமும் தோற்காது -பினராயி விஜயன்!

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜெயக்குமார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*