ரபேல் ஊழலுக்கு அருகில் வந்தால் பழிவாங்கப்படுவார்கள்!

FILE PHOTO: Rahul Gandhi speaks at an event in Singapore March 8, 2018. REUTERS/Thomas White/File Photo

அமைச்சர் ஜெயக்குமார் ராஜிநாமா?

தீர்ப்பு + சிந்து + ஜெயக்குமார் =பகடையாக உருட்டப்படும் சிந்து?

ரபேல் போர் விமான ஆவணங்களை கேட்ட காரணத்திற்காகவே சிபிஐ- அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் அரசோடு மோடி அரசு செய்து கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரமாண்டமான ஊழல் நடந்த விவகாரம் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக நாட்டின் உயர்ந்த விசாரணை அமைப்பான சிபிஐ- அமைப்பினுள் இது தொடர்பான பனிப்போர் வெடித்துள்ளது.

ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவும், இணை இயக்குநரான அஸ்தனாவையும் நேற்று நள்ளிரவு கட்டாய விடுப்பில் அனுப்பியது மோடி அரசு. 13 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ள அரசு நாகேஸ்வரராவை இயக்குநராக தற்காலிகமாக நியமித்துள்ளது.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரபேல் போர் விமானம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டதாகவும், அது தொடர்பாக இணை இயக்குநருக்கும் அவருக்குமிடையில் பனிப்போர் நிலவி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி “பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்‌ஷி அருண் ஜெட்லியின் மகளுக்கு பணம் வழங்கியுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய காரணத்திற்காக சிபிஐயின் இயக்குநர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்:-
“சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரபேல் போர் விமானம் தொடர்பான ஆவணங்களை சேகரித்து உள்ளார்.அவர் உடனே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடி சொல்லும் செய்தி ரபேல் அருகில் வரும் எவரும் நீக்கப்படலாம். அல்லது அலைக்கழிக்கப்படுவார்கள்”என்பது தெளிவாகிறது”என தெரிவித்துள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*