வரலாறு பன்னீரை விடுதலை செய்யுமா?-மருதம்

அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு!

கன மழைக்கு வாய்ப்பில்லை – ’தமிழ்நாடு வெதர் மேன்’

தர்மயுத்தம் நடத்திய பன்னீர் செல்வம்அன்று சொன்னது: அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது, யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை. சசிகலா மட்டுமே அம்மாவுடன் இருந்தார்.. என பன்னீர் தனது சந்தேகங்களை, சந்தேகம் என்பதை விட சசிகலா தான் காரணம் என உறுபதி பட சொல்லாமல் சொன்னார்.. அன்று தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்த சந்தேகங்கள் இருந்து வந்தது பன்னீரின் தர்மயுத்தத்திற்கு சாதகமாக இருந்தது …

ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்த குறித்து பன்னீருக்கு எப்போது அக்கறை ஏற்பட்டிருக்க வேண்டும்?

அம்மையார் செப்டம்பர் 22- இல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அம்மையாரின் இலாக்களை கவனித்து வந்த நேரத்தில் அக்கறை வரவில்லை

அம்மையார் சிகிச்சை பெற்ற நேரத்தில் எத்தனையோ முறை டெல்லி சென்ற பன்னீர் பிரதமரிடமோ, ஜனாதிபதியிடமோ, அல்லது தமிழகத்தில் பேசினால் தான் பயம், டெல்லியில் பகிரங்கமாக பத்திரிகையாள்களிடமோ அம்மாவின் சிகிச்சை குறித்து சந்தேகம் எழுப்பியிருக்கலாம், மந்திரிகளை பார்க்க வில்லை .. எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது என பன்னீர் அக்கறை காட்டவில்லை ..

சரி… ஜெயலலிதா அவர்கள் இறந்து அவரது பூத ஊடல் போயஸ் கார்டன் கொண்டு போகும் போது கூட பன்னிருக்கு அம்மாவின் மரணம் குறித்து சந்தேகமோ ? அக்கறையோ இருந்திருந்தால் முதல்வர் பதவி ஏற்றிருப்பாரா? அப்போதும் வாய் திறக்க வில்லை.

சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக வரவேண்டும் என உதயகுமார் முதல் குரல் எழுப்புகிறார். அதனைத் தொடர்ந்து பன்னிர் உள்ளிட்டோர் சசிகலாவிடம் கோரிக்கை வைத்து, சசிகலா பொ.செ. ஆனபின் சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து ஆசி பெற்றார் .. அப்போதும் பன்னிருக்கு ஜெ – மரணத்தில் சசிகலா குறித்து சந்தேகம் வரவில்லை ..

ஆனால் சசிகலா முதல்வர் பதவியை அடைய நேரத்தில் தான் பன்னிருக்கு ஜெயலலிதா மரணம் குறித்து அக்கறையும், சந்தேகமும் பெருக்கெடுத்து ஒடுகிறது. தனது அதிகாரம் பறிக்கப்பட்ட பிறகே தர்மயுத்தம் தொடங்கினார்.

கூவத்தூர் ஏற்பாட்டின் படி எடப்பாடி முதல்வரான பின்பும் அதிமுக அரசை கடுமை விமர்சித்தார். ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் பகிரங்கமாக அறிக்கை விட்டார். சட்டசபையில் திமுக ஆதரவு நிலை எடுத்தார். ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார் ..

பின்பு பா.ஜ.க மத்தியஸ்தம் செய்ததில் எடப்பாடியிடம் கூட்டு சேர்ந்தார்.. அப்போதிலிருந்து இன்று வரை ஜெயலலிதா மரணம் தொடர்பான கேள்விகளில் மன்னார்குடி குடும்பத்தை விமர்சிப்பதை பன்னீர் கொள்கையாக கொண்டிருந்தார்.

ஜெயலலிதா அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்ட லட்சோப லட்ச தொண்டர்கள் ஜெ – வின் இழப்பை தாங்க முடியாது, அப்போது எழுந்த சந்தேக சூழல்களில் பன்னீர் மேல் நம்பிக்கை வைத்தனர். அப்பட்டமான சந்தர்ப்பவாத தர்மயுத்தத்தை கூட சசிகலா மீது கொண்ட வெறுப்பினால் அந்த தொண்டர்கள் நம்பினார்கள்..

அதன்பிறகு சசிகலா, தினகரன் குருப்பிற்கும், பன்னீர் அணிக்கும் எற்பட்ட சண்டைகள், அறிக்கைகள், அவதூறுகள், ரெய்டு என பல சூழல்கள் பன்னீர் Vs தினகரன் , எடப்பாடி VS – தினகரன் என மாற்றியமைத்தது.

ஆனால் இத்தனை சூழல்களுக்கு இடையே பன்னீர் தினகரனை 2017 ஜுலை 12-இல் சந்தித்திருக்கிறார். அம்மையாரின் இறப்பிற்கு யார் காரணம் என சொன்னாரோ அவர்களையே யாருக்கும் தெரியாமல் சந்தித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை தூக்கி போட்டு விட்டு சந்தித்திருக்கிறார். ஆறுமுகசாமி விசாரணை நடைபெற்று வரும் வேளையில் சந்தித்திருக்கிறார். தர்மயுத்தத்தில் எழுப்பிய கேள்விகள் இப்போது என்னவாயிற்று … அதிகாரத்தை ருசிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்தை மட்டுமே கருத்திற் கொண்டு ஒரு பெருந்தலைவியின் மரணத்தை தனது அரசியலுக்கு பகடையாய் வைத்து விளையாடும் பன்னீரை காலம் மன்னிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன ஆனது கேரளப் பெண்களுக்கு?

பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*