வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுக்கு சீனா அழைப்பு!

India's Prime Minister Narendra Modi shakes hands with Chinese President Xi Jinping during the 18th Shanghai Cooperation Organisation (SCO) Summit in Qingdao, China, June 9, 2018. India's Press Information Bureau/Handout via REUTERS

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், வர்த்த ரீதியிலான போரை எதிர்கொள்ள இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
ஆயுதங்கள் வாங்கினாலும், வணிகம் செய்தாலும் தன்னுடன் மட்டுமே செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவின் எண்ணம். அந்த எண்ணம் சிதறும் போது அமெரிக்கா பொருளாதார தடைகளை பல நாடுகள் மீது விதிக்கிறது.
அமெரிக்கா டிரம்ப் நிர்வாகம் ரஷ்யா, சீனா , ஈரான் போன்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்குவதாலும், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதாலும் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வருகிறது அமெரிக்கா. இந்த தடைகள் தொடர்பாக சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டில்:-
“இப்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள இந்தியாவும் சீனாவும் இணைந்து ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம், இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது. அமெரிக்கா மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகள் சீனாவை மட்டும் பாதிக்காது. இந்தியாவையும் பாதிக்கும்.பொருளாதார பலமிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்கா தடுக்கும். சீனா, மற்றும் இந்தியாவின் வளர்ச்சி நோக்கிய பயணத்தை அமெரிக்கா தடுக்கிறது. தலையீடு செய்கிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதார வலைப்பின்னலைக் கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இரு நாட்களும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.சர்வதேச அளவில் இப்போது நிலவும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்காவின் பொருளாதாரப் போரை எதிர்கொள்ள முடியும்” என்றார்.

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

#இந்தியா_சீனா #இந்தியா_மீது_பொருளாதாரத்தடை #அமெரிக்கா_பொருளாதாரதடை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*